இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்து 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரின் போது கடைசியாக விளையாடியிருந்தார். அந்த தொடரில் கணுக்கால் காயத்துடன் விளையாடியிருந்த அவர் அதற்கு பிறகு லண்டன் சென்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். அதன்பிறகு பல மாதங்கள் ஓய்விலும் இருந்தார்.
இந்திய அணிக்கு திரும்பும் முகமது ஷமி :
இதன் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த முகமது ஷமி சமீபத்தில் தான் மெல்ல மெல்ல பயிற்சிகளை துவங்கி தற்போது உள்ளூர் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அவர் மீண்டும் எப்போது இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தான் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை என்று கூறி முகமது ஷமி தானாகவே அந்த தொடரில் விளையாட மாட்டேன் என்று அறிவித்தார். இந்நிலையில் மீண்டும் அவர் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பது உறுதி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியிலும் தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கம்பீர் பற்றி திவாரி சொல்றது உண்மை தானே.. தோனி எப்போவும் கிரெடிட் எடுத்ததில்லை.. ஆகாஷ் சோப்ரா
இதன் காரணமாகவே இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக நீடித்து வந்த முகமது ஷமியின் கம்பேக் தற்போது உறுதியாகியுள்ளது.