இந்திய கிரிக்கெட் அணி கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் எழுந்துள்ள விமர்சனங்களை சந்திக்க ரோஹித் சர்மாவை முன்னே அனுப்பிய கம்பீர் பின்னே இருந்து கொண்டதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். அத்துடன் ஐபிஎல் கோப்பைகளை கொல்கத்தாவுக்கு அவர் மட்டுமே தனியாளாக வென்று கொடுத்ததாக விளம்பரம் செய்ததாகவும் திவாரி விமர்சித்திருந்தார்.
அது போக இந்திய அணிக்கு இந்தியர்கள் தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று சொன்ன கம்பீர் இப்போது ரியான் டஸ்சேட், மோர்கெல் ஆகியோரை தேர்ந்தெடுத்தது ஏன்? என்றும் திவாரி கேள்வி எழுப்பினார். எனவே கௌதம் கம்பீர் நயவஞ்சகர் என்றும் அவர் பகிரங்கமாக விமர்சித்திருந்தார். அவருக்கு ஹர்ஷித் ராணா, நிதீஷ் ராணா ஆகிய கொல்கத்தா ஆகியோர் ஒரே மாதிரியான பதிலடி கொடுத்திருந்தார்கள்.
உண்மை தானே:
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை பகிர்ந்தது பின்வருமாறு. “ஹர்ஷித் ராணா, நிதீஷ் ராணா ஆகியோர் கம்பீருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனால் அந்த ஆதரவை பார்த்தால் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது போல் இருக்கிறது. அந்த இருவருடைய ஆதரவு கருத்துக்களும் யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்தது போல் இருக்கிறது”
“குறிப்பாக அது ஒரே மனிதர் அல்லது மெஷின் அல்லது சாட் ஜிபிடி எழுதியதை போல் இருக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. இங்கே மனோஜ் திவாரி சொன்ன ஒரு விஷயம் உண்மையானது. அதாவது இந்திய அணிக்கு வெளிநாட்டவர்கள் பயிற்சியாளராக இருக்கக்கூடாது என்று கௌதம் கம்பீர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அது நியாயமானது”
தோனிக்கு தாமாக பாராட்டு:
“ஆனால் இப்போது கௌதம் கம்பீர் துணைப் பயிற்சியாளர்களாக மோர்னே மோர்கெல் மற்றும் ரியான் டஸ்சேட் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த இருவருமே தங்கமான மனதை கொண்டவர்கள். ஆனால் அவர்கள் இந்தியர்கள் இல்லை என்பது உண்மையாகும். மேலும் 2012, 2014 ஐபிஎல் கோப்பைகளை கொல்கத்தா வென்றதற்கான பாராட்டுகளை கௌதம் கம்பீர் எடுத்துக் கொண்டதாக திவாரி கூறியிருந்தார்”
இதையும் படிங்க: ஓய்வு தர முடியாது நீங்க சாதிச்சது என்ன? கேஎல் ராகுல் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ.. வெளியான தகவல்
“பாராட்டுக்கள் (க்ரெடிட்) என்ற ஒன்றை பேசும் போது அது தாமாக வரவேண்டும். யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது. எம்எஸ் தோனி எப்போதும் எதையும் சொல்லவில்லை. அவர் எப்போதும் எதிர்பக்கமே இருப்பார். ஆனால் மக்கள் தான் அவருக்கு பாராட்டுக்கள் கொடுக்கிறார்கள். அவர் எப்போதும் பாராட்டுகளை பொதுவெளியில் கேட்டதில்லை. அவர் பாராட்டுகளை பெறுவதை மக்கள் விரும்பாமல் இருக்கலாம். ஆனால் தோனி எப்போதும் பாராட்டுகளை கேட்டதில்லை” என்று கூறினார்.