இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பிசிசிஐ தாமாக ஓய்வு கொடுக்க உள்ளது. ஏனெனில் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் 32 விக்கெட்டுகள் எடுத்த அவர் தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடி பல சாதனைகளை படைத்தார்.
அப்படி முழுமூச்சுடன் விளையாடிய அவர் கடைசி போட்டியில் லேசான காயத்தை சந்தித்தார். எனவே சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் காயம் மேற்கொண்டு பெரிதாகி விடக்கூடாது என்ற அக்கறையுடன் அவருக்கு பிசிசிஐ தாமாக ஓய்வு கொடுக்க உள்ளது. அதற்கிடையே கேஎல் ராகுல் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் தமக்கு ஓய்வு கொடுக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
பிசிசிஐ மறுப்பு:
அதற்கு பிசிசிஐ அனுமதி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கே.எல் ராகுல் கோரிக்கையை பிசிசிஐ அதிரடியாக மறுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் என்னவெனில் ஏற்கனவே டி20 அணியில் கழற்றி விடப்பட்டுள்ள ராகுல் ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் அவர் பெரியளவில் அசத்தவில்லை காயத்தையும் சந்திக்கவில்லை.
அது ஒரு புறமிருக்க ரிசப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதும் சிறப்பாக விளையாடியதில்லை. மறுபுறம் கேஎல் ராகுல் 2023 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடிய இந்தியா ஃபைனல் வரை செல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டார். எனவே சாம்பியன்ஸ் டிராபியில் ராகுலை விக்கெட் கீப்பராக விளையாட வைத்து பிசிசிஐ விரும்புகிறது.
ஓய்வு தர முடியாது:
அதற்கு தயாராவதற்காகவே இங்கிலாந்து தொடர் நடைபெற உள்ளது. எனவே அந்தத் தொடரில் ராகுல் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது. அதனாலேயே அவருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க விரும்பவில்லை. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “தேர்வாளர்கள் முதலில் ராகுலுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினார்கள்”
இதையும் படிங்க: இளம் சச்சினை விட ஹரி ப்ரூக் இப்போவே மாஸ்டரா வந்துட்டாரு.. இதான் காரணம்.. கிரேக் சேப்பல் பாராட்டு
“அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். ஆனால் தற்போது பிசிசிஐ அவரை இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாட வைக்க விரும்புகிறது. அப்போது தான் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்கான போட்டி நேரத்தை ராகுல் இப்போதே பெற முடியும்” என்று கூறினார். முன்னதாக விஜய் ஹசாரே கோப்பையில் கர்நாடக அணிக்காக ராகுல் விளையாடாமல் ஓய்வு எடுத்தது குறிப்பிடத்தக்கது.