5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த 2 வீரர்கள் – சுவாரசிய தகவல் இதோ

ஐபிஎல் தொடரில் இதுவரை 13 முறை நடைபெற்று முடிந்திருக்கிறது. அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. அதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.

mi

ராஜஸ்தான் ராயல்ஸ் சன் ரைசர்ஸ்,ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்று இருக்கின்றன. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் 2010ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து இரண்டு கோப்பைகளை வென்றது.

சி.எஸ்.கே அணி 2010 ஆம் ஆண்டு கோப்பையை வென்று விட்டு அதற்கு அடுத்து 2011ஆம் ஆண்டும் வென்று சாதனை படைத்திருந்தது. இப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் கோப்பையை வென்ற முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி அந்த வரிசையில் இணைந்திருக்கிறது.

Rohith

சென்ற வருடமும் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று இந்த வருடமும் கோப்பையை வென்று இருக்கிறது. மேலும் அந்த அணி 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனையை ரோகித்சர்மா படைத்திருக்கிறார்.

- Advertisement -

pollard

மேலும் இந்த ஐந்து முறையும் பொல்லார்ட் அந்த அணியில் இருந்து இருக்கிறார். ஒரு வீரராக ரோகித் சர்மா 6 முறை கோப்பையை வென்று இருக்கிறார். 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்த போது ரோகித் சர்மா கோப்பையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து 5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்ற அணியில் ரோஹித் மற்றும் பொல்லார்ட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.