இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது ஆகஸ்ட் 4-ஆம் தேதியான நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த மிக நீண்ட தொடரில் இரு அணிகளுமே தலா இரண்டு வெற்றினை பெற்று இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை டிராவில் முடித்துள்ளனர்.
கம்பீர் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் எடுத்த முடிவு :
இந்த தொடரானது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு மிகப்பெரிய தொடராக அமைந்தாலும் ஒவ்வொரு போட்டியுமே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த தொடரில் நடைபெற்ற அனைத்து ஆட்டங்களுமே இறுதி வரை சென்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிவுகளை எட்டியுள்ளது.
இதன் காரணமாக இந்த தொடரானது மறக்க முடியாத ஒரு டெஸ்ட் தொடராக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் நேற்று ஒரு வினோதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் எப்பொழுதுமே ஒரு டெஸ்ட் தொடர் முடிவடையும்போது அந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஒருவரை தான் தொடர் நாயகன் விருதுக்காக தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த தொடரை பொருத்தவரை இங்கிலாந்து அணி சார்பாக ஹாரி புரூக்கும், இந்திய அணி சார்பாக சுப்மன் கில் என இரு தொடர் நாயகன் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதற்கு பின்னால் இருக்கும் காரணம் யாதெனில் : இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீரின் ஆலோசனைப்படி இங்கிலாந்து அணியில் சிறப்பாக செயல்பட்ட வீரராக ஹாரி புரூக்கும், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான பிரெண்டன் மெக்கல்லம் ஆலோசனைப்படி இந்திய அணி சார்பாக சிறப்பாக செயல்பட்ட வீரராக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க : அம்பயர்கள் செய்த இந்த தவறால் தான் இங்கிலாந்து அணி தோற்றது.. நாசர் ஹுசேன் விளாசல் – விவரம் இதோ
அப்படி இரு அணிகளை சேர்ந்த பயிற்சியாளர்களும் இணைந்து இரண்டு வீரர்களுக்கு தொடர் நாயகன் விருதினை வழங்கியுள்ளனர். இப்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டு வீரர்களுக்கு இரண்டு அணி சார்பாகவும் தொடர் நாயகன் விருது வழங்குவது அரிதான ஒரு நிகழ்வுதான். அந்த நிகழ்வு தற்போது இந்த தொடரில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



