அம்பயர்கள் செய்த இந்த தவறால் தான் இங்கிலாந்து அணி தோற்றது.. நாசர் ஹுசேன் விளாசல் – விவரம் இதோ

Nasser Hussain
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது.

அம்பயர்கள் செய்த தவறால் தான் இங்கிலாந்து தோற்றது : நாசர் ஹுசேன்

கடைசி நாள் ஆட்டத்தில் 35 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி பெற்ற இந்த தோல்வி அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடைசி நாளின் போது இந்திய அணியின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் தேவை என்கிற சவாலான நிலை இருந்தது.

- Advertisement -

அவ்வேளையில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்திக்க அம்பயர்கள் எடுத்த தவறான முடிவே காரணம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசேன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியானது ஞாயிற்றுக்கிழமை அன்றே முடிந்திருக்க வேண்டும். ஒருவேளை அப்படி நான்காம் நாள் ஆட்டம் முடிந்து இருந்தால் நிச்சயம் இங்கிலாந்து அணி வெற்றிக்கு தேவையான 35 ரன்கள் அடித்திருக்கும்.

- Advertisement -

ஆனால் அம்பயர்கள் நான்காம் நாள் ஆட்டத்தை அரைமணி நேரம் முன்கூட்டியே முடித்ததுதான் இங்கிலாந்து அணிக்கு பாதகமாக அமைந்தது. நான்காம் நாள் அன்றே போட்டி முடிந்திருந்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கும். அதனை தவிர்த்து ஐந்தாம் நாள் வரை ஆட்டம் கொண்டு செல்லப்பட்டதால் நாங்கள் தோல்வியை சந்தித்தோம்.

இதையும் படிங்க : நெவர் சரண்டர்.. வெல்டன் பாய்ஸ்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய பிறகு – கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியான பதிவு

ஆட்டத்தின் சூழலுக்கு தேவைப்பட்டால் போட்டியை 40 முதல் 45 நிமிடங்கள் வரை கூடுதலாக நடத்தலாம் என்ற விதி இருந்தும் நான்காம் நாளில் போட்டி நடைபெறாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நடுவர்கள் எடுத்த இந்த தவறான முடிவு தான் எங்களது தோல்விக்கு காரணம் என்று நாசர் ஹுசேன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement