- Advertisement -
ஐ.பி.எல்

ரோஹித் சர்மா பற்றி நான் அப்படி சொன்னேனா? இப்படியெல்லாம் பொய் சொல்லாதீங்க ப்ளீஸ் – துஷார் தேஷ்பாண்டே விளக்கம்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இம்பேக்ட் வீரர் முறையை அறிமுகம் செய்ததிலிருந்து போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றன. இம்பேக்ட் விதிமுறைப்படி ஒரு வீரருக்கு பதிலாக இன்னொரு வீரரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனால் போட்டிகளின் முடிவுகளில் கூட சில சுவாரசியங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் முதல் இம்பேக்ட் வீரராக சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டே இடம் பிடித்தார்.

ஆனாலும் அதில் சோதனை என்னவென்றால் அவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். அந்த போட்டியில் அவரால் எந்த ஒரு இம்பேக்ட்டையும் ஏற்படுத்த முடியவில்லை இருந்தாலும் அதற்கு அடுத்து தோனி அவர் மீது நம்பிக்கை வைத்து அடுத்த வாய்ப்பினை வழங்கினார். அப்படி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் அவர் நோபால்களை வீசியதால் தோனி சற்று அதிருப்தி அடைந்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் மும்பை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் அவருக்கு தோனி வாய்ப்பினை வழங்கி இருந்தார். அந்த போட்டியின் நான்காவது ஓவரில் ரோகித் சர்மாவை கிளீன் போல்டாக்கி துஷார் தேஷ்பாண்டே போட்டியை சிஎஸ்கே-விற்கு சாதகமாக திருப்பினார். அதேபோன்று இறுதி நேரத்திலும் அவர் டிம் டேவிடை வீழ்த்தியிருந்தார். இப்படி அவரது சிறப்பான செயல்பாடு சிஎஸ்கே அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்திருந்தது. இந்நிலையில் இந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பற்றி துஷார் தேஷ்பாண்டே தெரிவித்ததாக சில கருத்துக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

அந்த வகையில் ரோஹித் குறித்து துஷார் தேஷ்பாண்டே கூறியதாக குறிப்பிடப்பட்டதாவது : ரோகித் சர்மா எல்லாம் பெரிய ஆட்டக்காரரே கிடையாது. அவர் ஒன்றும் விராட் கோலியோ, டிவில்லியஸ்ஸோ கிடையாது. ரோஹித் சர்மாவுக்கு எதிராக பந்துவீசுவதும், அவரது விக்கெட்டை எடுப்பதும் மிகவும் எளிது என அவர் கூறியதாக சில கருத்துக்கள் சமூகவலைதளத்தில் பரவின. இந்நிலையில் துஷார் தேஷ்பாண்டேவின் இந்த கருத்திற்கு மும்பை ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் இந்திய ரசிகர்களிடம் இருந்தும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மா குறித்து தான் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யான ஒன்று என்றும் இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என துஷார் தேஷ்பாண்டே இன்ஸ்டாகிராம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : ரோஹித் சர்மா குறித்து நான் கூறியதாக வெளியான கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை. குறிப்பிடப்பட்டுள்ள மூன்று லெஜெண்டுகள் மீதும் எனக்கு முழு மரியாதை இருக்கிறது.

இதையும் படிங்க : வீடியோ : எல்லாரும் தோனியாகி முடியாது, மீண்டும் அழுத்தத்தில் சொதப்பிய டிகே – டி20 உ.கோ நினைவுடன் விளாசும் ரசிகர்கள்

இது போன்ற கீழ்த்தனமான அறிக்கைகளை நான் வெளியிடவில்லை. எப்போதும் இதுபோன்று செய்ய மாட்டேன். இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்த அறிக்கையின் மூலம் ரோகித் சர்மா குறித்து அவர் எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை என்றும் இப்படி சமூக வலைதளத்தில் வெளியாகும் அனைத்து கருத்துகளும் பொய்யானவை என்பது நிரூபனம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by