சர்ச்சையில் சிக்கிய மகளீரணி கோச் துஷார் அரோதி.! பெண்களிடம் என்ன தவறு செய்தார்..?

- Advertisement -

கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 10 )கோலாலம்பூரில் உள்ள மைதானத்தில் ஆசிய கோப்பையின் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனானா இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி ஆசிய கோப்பையை வென்றது. இதனால் இதுவரை தொடர்ந்து 6 முறை ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி 7 வது முறை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.

indianwomescricket

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைய முக்கிய காரணம், இந்திய மகளீர் அணியின் பயிச்சியாளரான துஷார் அரோதி தான் காரணம் என்று இந்திய மகளீர் அணியில் உள்ள சில இளம் வீராங்கனைகள் குற்றச்சாட்டை வைத்துள்ளது. பயிற்சியாளர் துஷார் அரோதி அணி வீராங்கனை எடுக்கும் பல்வேறு முடிவுகளில் குறுக்கிடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், அவர் அணியில் இருக்கும் இளம் வீரங்கனைகளை அவர் எந்தவித முடிவுகளையும் எடுக்க அனுமதிக்க விடுவதில்லை என்றும் கடந்த புதன்கிழமை நடந்த கிரிக்கெட் நிர்வாகிகள் கூட்டத்தில், பிசிசிஐ நிர்வாகத்தை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளும் பயிற்சியாளர் துஷார் அரோதி மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இதனால் துஷார் அரோதி மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.

mithaliraj

சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த தகவலின்படி “நிலைமை கை மீறி சென்றுவிட்டது, அதனால் தான் ஒரு சில வீராங்கனைகள் எங்களிடம் வந்து புகார் அளித்தனர். இந்த குற்றச்சாட்டை தேர்வு கமிட் உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர். வீராங்கனைகளும் தேர்வு குழு உறுப்பினர்களும் ஆரோத்தியை இந்திய மகளீர் அணியின் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை ” என்று பிசிசிஐ நிர்வாக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Advertisement