6 மாதத்தடை இந்திய ஆஸ்திரேலிய தொடர் ரத்தாக வாய்ப்பு. அப்போ டி20 உலகக்கோப்பையும் அவ்ளோதானா – விவரம் இதோ

- Advertisement -

உலக அளவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தை நடத்தி வருகிறது. இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இருந்தாலும் உலக நாடுகள் பல ஊரடங்கை அறிவித்து தங்களது மக்களை காக்க போராடி வருகின்றனர். தற்போது உலக அளவில் ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Ind vs Aus

- Advertisement -

இதன் காரணமாக பல விளையாட்டு தொடர்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஆறு மாதம் கழித்து வரும் உலக கோப்பை டி20 தொடரும் இதனால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் இந்த தொடர் நடக்க உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் 2000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 16 பேர் மரணமடைந்துள்ளனர்.

அந்த நாட்டில் வைரஸின் தாக்கம் தீவிரமாக இருப்பதை அறிந்த அந்த நாட்டு அரசு அடுத்த ஆறு மாத காலத்திற்கு விமான போக்குவரத்தை தடை செய்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா சென்று ஆடவிருக்கும் டெஸ்ட் தொடர் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Ind-vs-aus-1

அடுத்த ஆறு மாத காலத்திற்கு இந்த தடை விதிக்கப்படும் என்றால் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த டி20 போட்டி தொடரும் பாதிக்கப்படும். மேலும் இதே காலத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முத்தரப்பு தொடரில் மோதுகிறது இந்த தொடரும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் ஆறு மாத கால பயணத் தடை என்பதால் எந்த அணியும் அங்கு செல்லமுடியாது. இதனால் தற்போதைய நிலையில் எந்த ஒரு தொடரும் நடைபெற இயலாத நிலையில் இருக்கிறது. இதனால் எந்த அணியும் தற்போது அடுத்த ஆறு மாதங்களுக்கு ஆஸ்திரேலிய நாட்டிற்கு செல்ல முடியாது என்பதனால் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவது சந்தேகம் தான்.

Cup

மேலும் இந்த தொடரை வேறு எங்காவது நடத்தலாமா ? என்பது குறித்து ஐ.சி.சி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே ஐ.சி.சி இந்த தொடரை நடத்த வாய்ப்புள்ளது என்று அறிவித்திருந்தது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் நிலைமை கட்டுக்குள் வந்தால் இந்த உலகக்கோப்பை தொடர் நடைபெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement