- Advertisement -
டி20

6, 6, 6, 2, 2, 6.. ஃபெரீரா வெறும் 9 பந்தில் 37.. 5 ஓவர் போட்டியில் மேக்ஸ்வெல் அணியை தெறிக்க விட்ட டிஎஸ்கே

அமெரிக்காவில் மேஜர் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் உச்சக்கட்டத்தைத் தொட்டுள்ளது. அந்தத் தொடரில் ஜூலை மூன்றாம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ஃப்ளோரிடாவில் 23வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின. மழையால் மிகவும் தாமதமான அப்போட்டி தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று நடுவர்கள் அறிவித்தனர்.

அதில் டாஸ் வென்ற வாஷிங்டன் கேப்டன் கிளன் மேக்ஸ்வெல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய டிஎஸ்கே அணிக்கு கேப்டன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்னில் நேத்ரவல்கர் வேகத்தில் அவுட்டானார். மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிய டேரில் மிட்சேல் 6 (5) ரன்னில் தாமாக ரிட்டையர்ட் அவுட்டாகி அடுத்த வீரர்களுக்கு வழி விட்டார்.

- Advertisement -

9 பந்தில் 37 ரன்ஸ்:

அடுத்ததாக ஜோடி சேர்ந்த சுபம் ரஞ்சனே – டோனோவன் ஃபெரீரா ஆகியோர் பட்டாசாக விளையாடினார்கள். அதில் சௌரப் நேத்ரவல்கர் வீசிய 4வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் சுபம் ரஞ்சனே 4, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டார். ஆனால் மிட்சேல் ஓவன் வீசிய கடைசி ஓவரில் ஃபெரீரா முரட்டுத்தனமாக பேட்டிங் செய்தார்.

அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த அவர் 4, 5வது பந்துகளில் டபுள் எடுத்து கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார். அந்த வகையில் 6, 6, 6, 2, 2, 6 என ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசிய அவர் மொத்தம் வெறும் 9 பந்துகளில் 39* ரன்களை 411.11 ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்டார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரஞ்சனே 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 39* (14) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

மிரட்டல் வெற்றி:

அவர்களுடைய அற்புதமான ஆட்டத்தால் 5 ஓவரில் டிஎஸ்கே 87/2 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு மிட்சேல் ஓவன் 7, ரச்சின் ரவீந்திரா 10, கேப்டன் கிளன் மேக்ஸ்வெல் 0, ஆண்ட்ரிஸ் கௌஸ் 6 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் கிளன் பிலிப்ஸ் 18* (11) ரன்கள் எடுத்த போதிலும் 5 ஓவரில் வாஷிங்டன் 44/4 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க: 277 ஸ்ட்ரைக் ரேட்.. 31 பந்தில் 86.. 9 சிக்ஸருடன் சூர்யவன்சி முரட்டுத்தனமாக சாதனை.. இங்கிலாந்தை சாய்த்த இளம் இந்தியா

அதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிகபட்சமாக நன்ரே பர்கர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையும் சேர்த்து 6வது வெற்றியைப் பெற்ற டிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் வாஷிங்டன் இரண்டாவது தோல்வியை சந்தித்தது.

- Advertisement -