என்னோட அம்மாவின் பிறந்தநாளில் இந்தியாவை வீழ்த்த அவர் தான் காரணம்.. தெ.ஆ ஆட்டநாயகன் ஸ்டப்ஸ் பேட்டி

- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 1 – 1* (4) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தென் ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. நவம்பர் பதினொன்றாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 125 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39* ரன்கள் எடுத்தார். பின்னர் சேசிங் செய்த தென்னாபிரிக்க அணிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டலை கொடுத்தார். குறிப்பாக ஹென்றிக்ஸ், க்ளாஸென், டேவிட் மில்லர் உள்ளிட்ட காட்டடி பேட்ஸ்மேன்களை அவர் சொற்ப ரன்களில் காலி செய்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

ஆட்டநாயகன் ஸ்டப்ஸ்:

ஆனால் 4வது இடத்தில் நங்கூரமாக விளையாடிய ட்ரிஷன் ஸ்டப்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்து 41* ரன்கள் குவித்தார். அதே போல கடைசி நேரத்தில் களமிறங்கிய ஜெரால்டு கோட்சி அதிரடியாக 19* (9) ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை பறித்தார். குறிப்பாக ஆவேஷ் கான் – அர்ஷ்தீப் சிங் ஆகியோர் கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்தார்கள்.

இந்நிலையில் இப்போட்டியில் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையை கோட்சி தான் தமக்கே கொடுத்ததாக ஆட்டநாயகன் விருது வென்ற ஸ்டப்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய அம்மாவின் பிறந்தநாளில் இந்தியாவை தோற்கடித்தது மகிழ்ச்சியான செயல் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அம்மாவின் பிறந்தநாளில்:

“ரன்ரேட் எங்களை விட்டு எப்போதும் தொலைவாக செல்லவில்லை. ஜெரால்டு கோட்சி வந்து அந்த இன்னிங்ஸ் விளையாடியது எங்களை வெற்றியை தாண்ட உதவியது. களத்திற்குள் வந்த அவர் நம்மால் இந்த போட்டியை வெல்ல முடியும் என்று சொன்னார். அந்த நேரத்தில் வெற்றி இரண்டு பெரிய பவுண்டரிகள் தொலைவிலேயே இருந்தது. நான் மூச்சு வாங்கிக் கொண்டு விளையாட முயற்சித்தேன்”

இதையும் படிங்க: 17 ரன்ஸ் 5 விக்கெட்ஸ்.. தெ.ஆ அணியை தெறிக்க விட்ட சக்கரவர்த்தி.. வரலாற்று சாதனையுடன் பரிதாப உலக சாதனை

“இன்று என்னுடைய அம்மாவின் பிறந்த நாள். எனவே எங்களுடைய உறவினர்கள் 20 – 30 பேர் இந்த போட்டியை பார்க்க வந்திருந்தார்கள். இந்த மைதானம் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு எனக்கு மிகவும் பிடித்த இடம். இங்கே கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். அதனால் நான் என்னுடைய மூச்சை கட்டுப்படுத்திக் கொண்டு விளையாட முயற்சித்தேன்” என்று கூறினார். இதை தொடர்ந்து மூன்றாவது போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement