தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. நவம்பர் 10ஆம் தேதி செயின் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 125 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39*, அக்சர் படேல் 27 ரன்கள் எடுத்தார்கள்.
பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பெரிய சவாலை கொடுத்தார். குறிப்பாக ரீசா ஹென்றிக்ஸ் 24, கேப்டன் ஐடன் மார்க்கம் 3, மார்கோ யான்சென் 7 ரன்களில் அவுட்டாக்கிய அவர் இந்தியாவுக்கு போராடினார். அதோடு நிற்காமல் காட்டுத்தனமாக அடிக்கக்கூடிய க்ளாஸெனை டக் அவுட்டாக்கிய அவர் மில்லரை 1 ரன்களில் காலி செய்தார்.
அசத்திய வருண்:
அதனால் 66-6 என தென் ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்திய இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ட்ரிஷன் ஸ்டப்ஸ் 47*, ஜெரால்டு கோட்சி 19* ரன்கள் அடித்து தென்னாபிரிக்காவை 19 ஓவரில் வெற்றி பெற வைத்தார்கள். குறிப்பாக அர்ஷ்தீப் சிங் – ஆவேஷ் கான் ஆகியோர் கடைசி ஓவர்களின் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு காரணமானது.
அதனால் வருண் சக்கரவர்த்தியின் போராட்டம் வீணானது என்றே சொல்லலாம். இருப்பினும் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒரு வெளிநாட்டு சர்வதேச டி20 போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன் குல்தீப் யாதவ் 2023ஆம் ஆண்டு இதே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக குல்தீப் யாதவும் 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
உலக சாதனை:
ஆனால் கடைசியில் இந்திய அணியை தோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோல்வியை சந்தித்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பரிதாப சாதனையையும் வருண் சக்கரவர்த்தி படைத்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோல்வியை சந்தித்த போட்டியில் சிறந்த பவுலிங்கை (5/17) பதிவு செய்த வீரர் என்ற பரிதாப உலக சாதனையையும் அவர் படைத்தார்.
இதையும் படிங்க: 3 விக்கெட்ஸ்.. தமிழக வீரர் சக்கரவர்த்தியின் போராட்டத்தை வீண்.. இந்தியாவின் சாதனை நடையை உடைத்த தெ.ஆ
இதற்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக 2016ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் 2024ஆம் ஆண்டு கார்டிப் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் மேத்தியூ ஷார்ட் இங்கிலாந்துக்கு எதிராக தலா 22 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. மொத்தத்தில் 1 – 1* (4) என்ற கணக்கில் இத்தொடரை தென்னாப்பிரிக்கா சமன் செய்துள்ளது. 3வது போடி நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.



