இவர்கள் இருவருக்கும் எதிராக பந்துவீசுவது ரொம்ப கஷ்டம் – ட்ரென்ட் போல்ட் வெளிப்படை

Boult-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது.

kkrvsmi

அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 54 பந்துகளில் 80 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 47 ரன்களும் குவித்தனர். பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக பேட் கம்மின்ஸ் 33 ரன்களும் தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் மும்பை அணியை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகனாக 80 ரன் அடித்த ரோகித் சர்மா தேர்வானார். இந்தப் போட்டிக்கு பிறகு பேசிய மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் கூறுகையில் : இந்த மைதானத்தில் உள்ள வெப்பமும் சூழ்நிலைகளிலும் சாதகமாக இல்லை என்று கூற முடியாது. ஏனெனில் நான் இங்கு ஒரு சில போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.

Russell

இந்த போட்டியில் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது யாரெனில் மோர்கன் மற்றும் ரசலுக்கு எதிராக பந்து வீசுவது தான். ஆனால் இன்றைய போட்டியின் முடிவில் வெற்றிகரமாக அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. நியூசிலாந்தில் இருந்து தற்போது வேறு ஒரு சூழ்நிலைக்கு மாறியுள்ளது என்னுடைய பந்துவீச்சை மேம்படுத்தியுள்ளது.

boult

இந்த தொடர் எனக்கு மிகப்பெரிய சவால் தான் இருப்பினும் உலகம் முழுவதும் இதுபோன்ற சவாலான கிரிக்கெட்டை விளையாட நான் ஆர்வமாகக் காத்திருக்கிறேன். இன்னும் சில அதிரடியான போட்டிகள் வர இருக்கின்றன. இந்த வருடம் புதிய அணிக்காக விளையாடுவது எனக்கு உற்சாகத்தை தருகிறது. மும்பை அணியில் உள்ள வீரர்கள் இனியும் வெற்றியை தொடர்வார்கள் என்று போல்ட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement