மும்பை அணியில் எனது ரோல் இதுதான். அதனை சரியாக செய்ததில் மகிழ்ச்சி – ட்ரென்ட் போல்ட் மகிழ்ச்சி

Boult-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

MIvsDC

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களும், பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டது. இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதியில் இஷான் கிஷன் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

Ishan kishan

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் டிரென்ட் போல்ட் கூறுகையில் : பவர் பிளே ஓவர்களில் இதுபோன்ற பந்துவீச்சை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாகவே நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். மும்பை அணிக்காக எனது தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. மும்பை அணி என்னை அன்பாக வரவேற்றது இந்த வெற்றியை நான் அவர்களுடன் இணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு கடினமான சூழ்நிலையில் இந்த தொடங்கியிருந்தாலும் சிறப்பாக முடிவடைந்துள்ளது.

boult

இந்த வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த தொடர் முழுவதுமே துவக்கத்தில் சில விக்கெட்டுகளை நான் எடுத்துள்ளேன். அதனை செய்ய வேண்டும் என்பது எனது திட்டமாகும். புது பாலை ஸ்விங் செய்யும்பொழுது நிச்சயம் துவக்கத்தில் விக்கெட் கிடைக்கும். அதுவே இந்த அணியில் என்னுடைய ரோல் அதனை சரியாக செய்ததில் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் போல்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement