இந்த ஆண்டு நான் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – மும்பை வீரர் அதிர்ச்சி பேட்டி

MI

மார்ச் மாதம் நடக்க இருக்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோன வைரஸ் காரணமாக தற்போது பெரும் பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் அனைத்தும் துபாய் மைதானங்களில் நடைபெறும் செப்டம்பர் 26 முதல் நவம்பர் முதல் வாரம் வரையிலான காலகட்டத்தை ஐபிஎல் தொடரில் எடுத்துக் கொண்டுள்ளது.

ipl

இதற்காக டி20 உலக கோப்பை தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கையில் வெளிநாட்டு வீரர்களை எப்படி ஐபிஎல் தொடர் நடக்கும் நாட்டிற்கு அழைத்து வருவது என பிசிசிஐ கடுமையாக யோசித்து வருகிறது. ஒருபக்கம் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் வெளிநாட்டு வீரர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் டிரென்ட் போல்ட் இந்த ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம்தான் என்பதுபோல் பேசியுள்ளார். அவர் கூறுகையில்… எனக்கு விருப்பமானவர்களிடமும் ,என்னை நேசிப்பவர்கள் வரும் கலந்தாலோசித்து கொண்டிருக்கிறேன். ஆலோசித்துவிட்டு தான் முடிவெடுப்பேன்.

boult 1

எனக்கும் எனது குடும்பத்துக்கும் எது நன்றாக இருக்குமோ அதைத்தான் செய்வேன். நியூசிலாந்தில் ஐபிஎல் தொடரப்படும் என்று கூறியிருந்தார்கள். அது தற்போது நடக்காது இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார் டிரென்ட் போல்ட்.

- Advertisement -

Boult

ஆனால் தற்போதுவரை வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. விரைவில் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது குறித்தான வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக டெல்லி அணிக்காக ஆடிவந்த இவர் இந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாட ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.