இந்திய அணியை பவர்பிளே ஓவர்களிலே முடிச்சி காட்டுவேன் – நியூசி வீரர் விட்ட சவால்

Boult
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என்று இந்த தொடருக்கு முன்னர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பேசப்பட்ட இந்திய அணியானது தங்களது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து தற்போது 2-வது லீக் போட்டியில் துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

NZvsIND

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்கும் என்கிற காரணத்தினால் நாளைய போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா ? சாவா ? போட்டியாக அமைய இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு சாதகமாக அமையும் என்கிற காரணத்தினால் இரு அணிகளுமே பலமாக போட்டியிடும்.

இதன் காரணமாக நாளைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு சற்றும் பஞ்சமிருக்காது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் இந்திய அணியை வீழ்த்தும் தனது திட்டம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் :

boult

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இந்திய அணிக்கு எதிராக என்ன செய்தாரோ அதையே தான் தானும் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களிலேயே விரைவில் வீழ்த்தினால் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்த முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமேலும் லேட்டானா அது நமக்கு தான் டேஞ்சர். அணிக்குள் இணைய இருக்கும் சீனியர் வீரர் – இந்திய அணியில் மாற்றம்

அதன் படி நான் அவர்களை பவர்பிளே ஓவர்களிலேயே இன் ஸ்விங் டெலிவரிகள் மூலம் இந்திய அணியை நிச்சயம் வீழ்த்திக்காட்டுவேன் என சவால் விட்டுள்ளார். அவரின் இந்த அறைகூவல் பலிக்குமா என்பது நாளைய போட்டியில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement