என்னைப்பொறுத்தவரை டெத் ஓவர்களில் இவரே உலகின் மிகச்சிறந்த பவுலர் – ட்ரென்ட் போல்ட் புகழாரம்

Boult
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஓரளவிற்கு ஆடி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் குயின்டன் டி காக் 40 ரன்களும், ரோகித் சர்மா 32 ரன்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து வந்த பொல்லார்ட் 22 பந்துகளில் 35 ரன்கள் குவிக்க மும்பை அணிகள் ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. மிக எளிதான இலக்கை துரத்திய ஆடிய ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர்.

pollard

- Advertisement -

ஜானி பேர்ஸ்டோ 43 (22), டேவிட் வார்னர் 36 (34) ரன்கள் எடுத்து வெளியேறினார். வெற்றியை நோக்கி மிகச்சிறப்பாக சென்று கொண்டிருந்த ஹைதராபாத் அணி திடீரென அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணியின் இந்த தோல்வி மிகப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்த போட்டியில் டெத் ஓவர்களில் ட்ரென்ட் போல்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 137 ரன்கள் மட்டுமே அடிக்க விட்டு சுருட்டினர். அதிலும் குறிப்பாக 19வது ஓவர் மற்றும் 20 ஓவர் ஆகிய இரண்டு ஓவர்களும் மிக சிறப்பாக வீசி தாங்கள் ஒரு உலகத்தரமான பவுலர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

boult

பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேபோன்று போல்ட் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து டிரென்ட் போல்ட் அளித்த பேட்டியில் பும்ரா குறித்து கூறுகையில் : பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் செயல் படுவதை பார்க்க சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்த ஸ்பெல் முழுவதும் எவ்வாறு வீச வேண்டும் என்பதை மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்படுகிறார்.

Bumrah

அதேபோன்று என்னுடைய தனிப்பட்ட முறையில் சிறந்த டெத் பந்து வீச்சாளர்களில் பும்ரா முதன்மையானவர். அவர் என்னுடைய வேலையை எளிமையாக்கி விடுகிறார். சரியான அணியுடன் இந்த தொடர் முழுவதும் இதே போன்ற சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த விரும்புகிறோம் என போல்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement