ஐ.பி.எல் தொடரின் முதல் ஓவரில் இப்படி ஒரு சாதனையா ? – அசரவைத்த ட்ரென்ட் போல்ட்

Boult
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்தபடியே மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருடமும் கோப்பையை கைப்பற்றி விட்டது. ஒவ்வொரு வருடமும் மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்ந்து இப்படி பல சாதனைகள் செய்து வருகிறது. இந்த கோப்பை அந்த அணி 5வது கோப்பையாக அமைந்திருக்கிறது. இதுவரை எந்த ஒரு அணியும் ஐந்து கோப்பைகள் வென்றதில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்று இருக்கிறது.

mi

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் மேலும் பல சாதனைகள் படைத்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா 28 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டுகளின் எண்ணிக்கை இதுதான். அதே நேரத்தில் அந்த அணியின் டிரென்ட் போல்ட் யாரும் படைக்காத ஒரு புதிய விதமான சாதனையை படைத்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு இந்த இரண்டு பந்து வீச்சாளர்களும் பெரிதும் உதவினர் என்று கூறினால் அது மிகையாகாது. இருவருமே முதல் சில ஓவர்களுக்குள் சில விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார்கள். இதுவே அந்த அணியின் பெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதில் டிரென்ட் போல்ட் எப்போதும் முதலில் பவர்பிளே ஓவர்களில் பந்து வீசுவார்.

boult

அப்படி போட்டியின் முதல் ஓவரில் மட்டும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் ட்ரெண்ட் போல்ட். இது ஐபிஎல் தொடரில் இந்த சாதனையை எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் முதல் ஓவரில் இத்தனை விக்கெட்டுகள் வீழ்த்தியதில்லை. அதிகபட்சமாக டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய 4 போட்டிகளிலும் முதல் ஓவரில் விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

இதற்கு அடுத்ததாக புவனேஸ்வர் குமார் ஆறுமுறை முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இந்த வருட ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தேவை பட்டிருந்தார். லசித் மலிங்கா வெளியேறி விட்டதால் ஜஸ்பிரித் பும்ரா உடன் சேர்ந்து அவருக்கு இணையான வேகப்பந்து வீச்சாளராக டெல்லி அணியிடம் இருந்து டிரென்ட் போல்ட் மும்பை அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement