பும்ரா உடன் இணைந்த வேகப்பந்து வீச்சு நட்சத்திரம். பயிற்சியில் ஸ்டம்பை உடைத்து அட்டகாசம் – மும்பை அணி வெளியிட்ட வீடியோ

Stump

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

CskvsMi

இந்தத் தொடரின் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் கடந்த ஆண்டு கோப்பையைத் தவற விட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சனிக்கிழமை அன்று துவங்க இருக்கும் இந்த முதல் போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

மேலும் இந்த தொடர் கைப்பற்றுவதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது துபாயில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பாக தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் மும்பை அணிக்காக இணைந்துள்ளார்.

இம்முறை மும்பை அணிக்காக விளையாட உள்ள டிரென்ட் போல்ட் துபாயில் அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார் .அப்போது தனது பந்து வீச்சின் மூலம் ஒரு ஸ்டம்பை இரண்டு துண்டுகளாக உடைத்தெறிந்தார். இதனை “கிளீன் போல்ட்” “ட்ரென்ட் ஹேஸ் அரைவிட்” என்ற கேப்ஷன் போட்டு மும்பை இந்தியன்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

- Advertisement -

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மணிக்கு 140 கி.மீ மேல் வீசக்கூடிய டிரென்ட் போல்ட் உலக அளவில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.