“பாக்சிங் டே” போட்டியின் முதல் ஓவரிலேயே ஸ்டம்பை எகிறவைத்த ட்ரெண்ட் போல்ட் – வைரல் வீடியோ

Boult

ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்மஸ் தினத்தன்று விளையாடு டெஸ்ட் போட்டி “பாக்ஸிங் டே டெஸ்ட்” போட்டி என்று அழைக்கப்படும். தொடர்ந்து ஆண்டுதோறும் நடந்து வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 32 ஆண்டுகளுக்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் நியூசிலாந்து அணி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை குவித்துள்ளது. ஸ்மித் ஆட்டமிழக்காமல் 77 ரன்களுடனும், ஹெட் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்தப் போட்டியின் முதல் ஓவரை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் போது ஆஸ்திரேலிய துவக்க வீரரான ஜோ பர்ன்ஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே டிரென்ட் போல்ட் இன் அபாரமான இன்ஃஸ்விங்கிங் பந்துவீச்சின் மூலம் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் முக்கியமான பாக்சிங் டே போட்டியின் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பர்ன்ஸ் வெளியேறினார். போல்ட் வீசிய இந்த பந்து பாகிஸ்தான் தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்ரம் வீசுவதை போன்று இருந்தது என்று பலரும் கூறி இந்த விடீயோவினை பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -