ஐ.பி.எல் தவிர்த்து மற்ற டி20 லீக் தொடர்களில் எனக்கு விளையாட விருப்பம் இல்லை – டிராவிஸ் ஹெட் பேட்டி

Travis-Head
- Advertisement -

ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கிய அவர் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அந்த அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.

ஐ.பி.எல் தவிர வேறுயெந்த லீக்கிலும் விளையாடமாட்டேன் :

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலுமே அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அந்த அணியின் நிர்வாகமும் அவரை இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக அவர்களது அணியில் 14 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக 6.80 கோடிக்கு வாங்கப்பட்ட அவருக்கு ஒரே ஆண்டிலேயே 14 கோடி ரூபாய் என்கிற அளவிற்கு உயர்வான சம்பளமும் அவரது சிறப்பான செயல்பாட்டின் மூலம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் அவர் சர்வதேச போட்டிகளை தவிர்த்து ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாடுவேன் என்றும் மற்ற தொடர்களில் விளையாட விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் ஐபிஎல் தவிர வேறுயெங்கும் விளையாட மாட்டேன். ஏனெனில் ஆஸ்திரேலியா மற்றும் ஐபிஎல் தொடர்களில் நான் விளையாடும் போது தேவையான ஓய்வு கிடைக்கிறது. எனது குடும்பமும் எனக்கு முக்கியம் என்பதனால் தேவையான நேரத்தில் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க : பிசிசிஐக்கு பயந்து ரஞ்சிக் கோப்பை.. கடமையை செய்த ரோஹித் முன்னேறவே இல்ல.. கவாஸ்கர் அதிருப்தி

அதனாலேயே நான் ஆஸ்திரேலியா அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவேன். மற்றபடி தற்போதும் நான் தொடர்ந்து விளையாடி வருவதால் களைப்பாக இருக்கிறேன் என்று டிராவிஸ் ஹெட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement