- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ராவை சமாளிக்க திட்டம் இருந்தது.. ஆனா இவரை சமாளிக்க தான் என்கிட்ட பிளான் இல்ல – டிராவிஸ் ஹெட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது காபா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது துவக்கத்தில் 75 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அவரை சமாளிக்க என்கிட்ட திட்டம் இல்ல :

பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் குவித்து அசத்தினர். அதை தொடர்ந்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாவி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் அதிரடியான ரன் குவிப்பிற்கு முக்கிய முக்கியமான காரணமாக டிராவிஸ் ஹெட் இருந்தார். இந்த போட்டியில் 160 பந்துகளை சந்தித்த அவர் 18 பவுன்டரியுடன் 152 ரன்கள் குவித்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது தான் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விதம் குறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ரா மிகச்சிறப்பாக பந்து வீசினார். அவர் வீசும் பந்துகள் அனைத்தும் விக்கெட் எடுக்கும் பந்துகளாகவே இருக்கின்றன.

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு எதிராக பாசிட்டிவ் இன்டட்டுடன் விளையாட வேண்டும் என்று விளையாடினேன். அந்த வகையில் அவருக்கு எதிராக பந்துகளை நன்றாக பார்த்து விளையாடினேன். அதோடு என்னுடைய கால் நகர்வுகளையும் நன்றாக பயன்படுத்தி அவருக்கு எதிராக சிறப்பாக விளையாட திட்டமிட்டேன். ஒருபுறம் பும்ராவுக்கு எதிராக திட்டம் வைத்திருந்தேன்.

இதையும் படிங்க : அவுட்டாக வழியே இல்ல.. இந்தியாவை அடிச்சுகிட்டே இருப்பேன்.. காரணம் இது தான்.. ஹர்பஜனுக்கு ஹெட் பதில்

மறுபுறம் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சுக்கு எதிராக விளையாடும் சற்று பதட்டமாக இருந்தது. ஏனெனில் அவருடைய பந்துவீச்சு எவ்வாறு இருக்கும் என்பதை இந்த மைதானத்தில் எனக்கு தெரியாததால் அந்த பதட்டம் இருந்தது. அவருக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சி என்று டிராவிஸ் ஹெட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -