- Advertisement -
ஐ.பி.எல்

அவங்க’கிட்ட அட்வைஸ் கேட்டு.. நல்லா குளிச்சி சாப்பிட்டு ஆர்சிபி’யை நொறுக்குனேன்.. ஆட்டநாயகன் ஹெட் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற 30வது லீக் போட்டியில் பெங்களூருவை 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. பெங்களூருவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 287/3 ரன்கள் குவித்து அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் அடித்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தது.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 102 (41), ஹென்றிச் க்ளாஸென் 67 (31) ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 288 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு விராட் கோலி 42, கேப்டன் டு பிளேஸிஸ் 62, தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அடித்து முடிந்தளவுக்கு போராடினர்.

- Advertisement -

குளித்து சாப்பிட்டு விட்டு:
ஆனாலும் இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவரில் 262/7 ரன்களுக்கு பெங்களூருவை கட்டுப்படுத்தி வெற்றி பெற்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் நான்காவது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் ஆறாவது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு 10வது இடத்தை வலுவாக பிடித்தது.

இந்த வெற்றிக்கு சதமடித்து 102 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக 39 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற டேவிட் வார்னர் சாதனையையும் உடைத்து புதிய சாதனை படைத்தார். இந்நிலையில் பெங்களூரு மைதானப் பராமரிப்பாளர்களிடம் போட்டி துவங்குவதற்கு முன்பே பிட்ச் பற்றி சில ஆலோசனையை பெற்றதாக ஹெட் கூறியுள்ளார்.

- Advertisement -

அதைக் கேட்டுவிட்டு நன்றாக சாப்பிட்டுவிட்டு குளித்துவிட்டு வந்து பெங்களூருவை நொறுக்கியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கொஞ்சம் நல்ல உணவு சாப்பிட்டு குளித்து விட்டு மைதானத்தில் காலடி வைத்தேன். பிட்ச் அழகாக விளையாடியது. மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் உள்ளூரில் இருக்கும் சில நபர்களிடம் நாங்கள் அதை பற்றி ஆலோசனைகளை பெற்றோம்”

இதையும் படிங்க: 262 ரன்ஸ்.. 108மீ சிக்ஸர்.. போராடிய டிகே.. அடக்கிய ஹைதராபாத்.. மும்பையை முந்தி சாதனை படைத்தும் ஆர்சிபி தோல்வி

“அதனால் எங்களுக்கு அடித்து நொறுக்குவதற்கான லைசன்ஸ் கிடைத்ததாக நாங்கள் நினைத்தோம். இளமையுடன் பயமின்றி விளையாடும் அபிஷேக் சர்மாவும் நானும் ஒருவரை ஒருவர் சார்ந்து விளையாடுகிறோம். அவருடன் பேட்டிங் செய்வதை நான் விரும்புகிறேன். எனக்கு எதிராக எப்படி சிறப்பாக பந்து வீசுவது என்பது தெரியவில்லை. இருப்பினும் இன்று நான் பந்தை அடித்த விதத்தில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -