- Advertisement -
ஐ.பி.எல்

இம்பேக்ட் பிளேயர் மட்டுமல்ல.. அந்த 3 விஷயத்தால் ஆல் ஏரியாலயும் பவுலர்களை அடிக்கிறாங்க.. சிராஜ் பரிதாப பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் அனைத்து 10 அணிகளும் கோப்பையை வெல்வதற்காக போட்டியிட்டு வருகின்றன. பொதுவாகவே ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் அதிரடியான பவுண்டரி மற்றும் சிக்சர்களை பறக்க விட்டு பவுலர்களைப் பந்தாடுவது வழக்கமாகும். ஆனால் இந்த வருடம் ஒரு படி மேலே சென்ற பேட்ஸ்மேன்கள் கொஞ்சமும் கருணை காட்டாமல் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி ரன்களை குவித்து வருகின்றனர்.

குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக 287 ரன்கள் விளாசியாக ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது. அது போக டெல்லிக்கு எதிராக 5 ஓவரில் 100 ரன்கள் குவித்த அந்த அணி உலக சாதனை படைத்தது. அதே போல கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணி அசால்டாக 262 ரன்களை சேசிங் செய்து பிரம்மாண்ட உலக சாதனை படைத்தது.

- Advertisement -

சிராஜ் பரிதாபம்:
அதனால் இந்த வருடம் பவுலர்களின் நிலைமை கொஞ்சம் படுமோசமாக இருக்கிறது என்று சொல்லலாம். அந்த சூழ்நிலையில் இம்பேக்ட் வீரர் வந்ததால் ஒவ்வொரு அணியும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்னுடன் களமிறங்குகின்றன. எனவே அது தான் பவுலர்கள் இப்படி அடி வாங்குவதற்கு காரணமாக இருப்பதாக பல வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய வருகின்றனர்.

இந்நிலையில் இம்பேக்ட் விதிமுறையை தாண்டி ஃபிளாட்டான பிட்ச்கள், குறைவான பவுண்டரி தூரத்தைக் கொண்ட சிறிய மைதானங்கள், ஸ்விங் கிடைக்காத பந்து போன்றவையும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ரசிகர்களை கவர்வதற்காக கடைபிடிக்கப்படும் இந்த எழுதப்படாத விதிமுறையால் களத்தில் எந்த உதவியும் கிடைக்காமல் பவுலர்கள் அடி வாங்குவதாக சிராஜ் பரிதாபத்துடன் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று கிரிக்கெட் என்பது மிகவும் வித்தியாசமாகி விட்டது. இப்போதெல்லாம் ஒவ்வொரு இரண்டாவது போட்டியிலும் 250 – 260 ரன்கள் அடிக்கப்படுகிறது. முன்பெல்லாம் 250 ரன்கள் என்பது அரிதாக இருந்தது. தற்போது சிறிய மைதானங்கள், ஃபிளாட்டான பிட்சுகள், ஸ்விங் இல்லாத பந்துகள் போன்ற பல்வேறு அம்சங்கள் மாறி விட்டன. அதனால் பவுலர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறினாலும் வங்கதேச அணியின் சேர்க்கப்படாத முஸ்தபிசுர் ரஹ்மான் – விவரம் இதோ

“அதனாலேயே பவுலர்கள் தொடர்ச்சியாக அடி வாங்குகின்றனர். எனவே பவுலராக நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். வாழ்க்கையில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கும். அதனால் 1 – 2 போட்டிகள் உங்கள் வழியில் வராமல் போனாலும் மனதை விடக்கூடாது. தற்சமயத்தில் நான் கம்பேக் கொடுக்க முயற்சித்து வருகிறேன். ஒரு மாதத்தில் உலகக்கோப்பை வர உள்ளதால் முடிந்தளவுக்கு மோசமான பந்துகளை குறைவாக வீசி முயற்சிக்கிறேன். ஐபிஎல் தொடரில் இப்போதெல்லாம் 4 ஓவரில் 40 ரன்கள் கொடுப்பது சாதாரணமாகிவிட்டது” என்று கூறினார்.

- Advertisement -