மிட்சேல் ஜான்சன் மாதிரி.. அசத்தியமான பும்ராவுக்கு எதிரா இதை செய்வது கஷ்டம்.. ஹெட், ஸ்மித் பேட்டி

Steve Smith
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் இந்தியாவை எப்படியாவது வீழ்த்தும் முனைப்புடன் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. ஏனெனில் கடைசியாக விளையாடிய 2 தொடர்களிலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ராவை சிறப்பாக எதிர்கொள்வது கிட்டத்தட்ட அசாத்தியமானது என ஆஸ்திரேலிய துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது அசாத்தியம். நீங்கள் ஒரு கால் முன்னே இருப்பதாக உணர்வீர்கள். ஆனால் அவர் உங்களுக்கு முன் அடுத்த படியில் இருப்பதாக உணர்வீர்கள்”

- Advertisement -

அசத்தியமான பும்ரா:

“எந்த வகையான ஃபார்மெட்டிலும் அவர் சிறந்த வீரர். அவர் இந்திய அணியின் துருப்புச்சீட்டு வீரர். அவரால் இந்தியாவுக்கு அவ்வப்போது சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முடிகிறது. பெரிய தருணங்களில் அசத்த உங்களுக்கு பெரிய வீரர்கள் தேவை. அந்த வகையில் பும்ரா அவருடைய மிகப்பெரிய வீரர். அவரை இந்த கோடைகாலத்தில் எதிர்கொள்வது கடினமாக இருக்கும்” என்று கூறினார்.

மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் போல அதிரடியான வேகத்தில் வீசக்கூடியவர் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவை முதல் முறையாக எதிர்கொண்ட போது இவருடைய பந்து எங்கிருந்து வருகிறது என்பது போல ஆச்சரியப்பட்டேன். அவருடைய வேடிக்கையான ஆக்சன் மற்றும் பந்தை ரிலீஸ் செய்யும் இடம் காரணமாக அவரின் பந்துகள் முன்னதாகவே வருவதாக நீங்கள் கருதுவீர்கள்”

- Advertisement -

ஜான்சன் மாதிரி:

“மிட்சேல் ஜான்சன் போல அவரும் வித்தியாசமான ஆக்சனை கொண்டுள்ளார். அவர் வீசும் பந்து கொஞ்சம் வேகமாக வருவது போல் நீங்கள் உணர்வீர்கள். அதே போலவே பும்ராவின் கைகளும் வருகிறது” என்று கூறினார். பும்ரா பற்றி ஸ்டீவ் ஸ்மித் பேசியது பின்வருமாறு. “பும்ரா தனது பந்து வீசும் விதத்தால் மற்ற பவுலர்களை விட மிகவும் வித்தியாசமானவர்”

இதையும் படிங்க: 69 டூ 3 பெரிய ஜம்ப் அடித்த திலக் வர்மா.. நம்பர் 1 இடத்தை பிடித்த ஹார்டிக் பாண்டியா – அசத்தல் விவரம் இதோ

“எனவே அவருடைய பந்துகளை எதிர்கொள்ள கொஞ்சம் நேரம் தேவைப்படும். தற்போது அவருக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன். ஆனால் இப்போதும் சில பந்துகளை எதிர்கொண்ட பின்பே அவருக்கு எதிராக அடிக்க தொடங்குவேன்” என்று கூறினார். இதை அடுத்து ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளில் வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறும் முனைப்புடன் போராட உள்ளது.

Advertisement