69 டூ 3 பெரிய ஜம்ப் அடித்த திலக் வர்மா.. நம்பர் 1 இடத்தை பிடித்த ஹார்டிக் பாண்டியா – அசத்தல் விவரம் இதோ

Pandya-and-Tilak
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இளம் வீரர்கள் சிலரின் ஆட்டம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள் :

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இரண்டு சதங்களை விளாசி அசத்திய வேளையில் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னாய் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் அசத்தியிருந்தனர். பாண்டியா மூன்று வகையான துறையிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த கையோடு சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்கள் பலரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக ஹார்டிக் பாண்டியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டாக இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் தனது கிரிக்கெட் கரியரில் இரண்டாவது முறையாக அவர் டி20 போட்டிகளில் ஆல் ரவுண்டராக முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

அதேபோன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி கடைசி இரண்டு போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்த திலக் வர்மா 280 ரன்களை குவித்ததன் மூலம் தற்போது 69 இடங்கள் முன்னேறி டி20 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : பும்ரா அதுக்கு தகுதியானவர்ன்னு.. என்னோட ஆலோசகர் தோனியே சொல்லிருக்காரு.. ஹைடன் ஆதரவு

சூரியகுமார் யாதவ் ஒரு இடம் சரிந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் 2 சதங்கள் அடித்த சாம்சன் 22-வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ள வேளையில் ரவி பிஷ்னாய் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

Advertisement