- Advertisement -
உலக கிரிக்கெட்

91 ரன்ஸ்.. 6 வருடம் கழித்து ஆஷஸில் அபார சாதனை படைத்த ஹெட்.. இங்கிலாந்தை திருப்பி அடிக்கும் ஆஸி

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகள் முடிவில் 3 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்று விட்டது. கடைசிப் போட்டி ஜனவரி நான்காம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 384 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு ஜாக் கிராவ்லி 16, பென் டக்கெட் 27, ஜேக்கப் பெத்தல் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 57/3 என தடுமாற்றமான துவக்கத்தைப் பெற்ற இங்கிலாந்துக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நிதானமாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக் அரை சதமடித்து 4வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 84 ரன்களை குவித்து அவுட்டானார்.

- Advertisement -

ரூட் அசத்தல்:

மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரூட் தன்னுடைய 41வது சதத்தை இங்கிலாந்தை வலுப்படுத்தினார். எதிர்புறம் வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டானாலும் ஜேமி ஸ்மித் 46, வில் ஜேக்ஸ் 27 ரன்கள் அடித்துப் போராடிப் பெவிலியன் திரும்பினார்கள். இந்தப் பக்கம் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுத்த ஜோ ரூட் 160 ரன்கள் குவித்து 9வது விக்கெட்டாக அவுட்டானார். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 2, மிட்சேல் ஸ்டார்க் 2, மைக்கேல் நீசர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜேக் வெதர்லேண்ட் 21 ரன்களில் ஸ்டோக்ஸ் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் தம்முடைய ஸ்டைலில் இங்கிலாந்துக்கு பயத்தைக் காட்டும் வகையில் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதத்தை நெருங்கிய போது 48 ரன்னில் ஸ்டோக்ஸ் வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

2019க்குப்பின் அபார சாதனை:

ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து இங்கிலாந்தை வெளுக்கும் டிராவிஸ் ஹெட் 2வது முடிவில் 91* ரன்களுடன் களத்தில் இருக்கிறார். அவருடைய நல்ல ஆட்டத்தால் இங்கிலாந்தை திருப்பி அடிக்கும் ஆஸ்திரேலியா 166/2 ரன்கள் குவித்துள்ளது. இந்தத் தொடரில் ஆரம்ப முதலே சிறப்பாக விளையாடி வரும் ஹெட் இதுவரை 9 இன்னிங்ஸில் 528* ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு 3 பதிலடி.. ஐபிஎல்’க்கு தங்கள் நாட்டில் தடை விதித்த வங்கதேசம்.. அம்பயர்களையும் நிறுத்தி அறிவிப்பு

இதன் வாயிலாக 6 வருடங்கள் கழித்து ஒரு ஆஷஸ் தொடரில் 500 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கடைசியாக 2019 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 500+ ரன்கள் அடித்திருந்தார். அவருக்குப் பின் சாதனை படைத்த ஹெட்டுடன் களத்தில் மைக்கேல் நீசர் 1* ரன்னில் இருக்கிறார்.

- Advertisement -