இந்தியா பழி வாங்க வருவாங்க.. ஆனா இதை செய்யலன்னா வெச்சு செஞ்சுடுவோம்.. ஹெட் பேட்டி

Travis Head
- Advertisement -

ஐசிசி டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கப் போகும் இந்த தொடரில் 20 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக விளையாடி வருகின்றன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியுள்ளது.

அந்த வகையில் ஜூன் மாதம் முழுவதும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்போகும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி ஃபைனலுக்கு தகுதி பெறும் அணிகள் யார் என்ற எதிர்பார்ப்பும் கணிப்புகளும் காணப்படுகின்றது. அது போன்ற சூழ்நிலையில் கடந்த வருடம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் மோதிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளே இம்முறையும் இறுதிப்போட்டியில் விளையாடும் என்று சௌரவ் கங்குலி கணித்திருந்தார்.

- Advertisement -

பழி வாங்க நினைப்பாங்க:
இந்நிலையில் இந்த தொடரில் இறுதிப் போட்டியில் தங்களுடன் மோதுவதற்கு இந்தியா வரலாம் என ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தோல்விகளுக்கு தங்களை பழிவாங்க இந்தியா நினைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படி ஒருவேளை ஃபைனலுக்கு வந்து அதிரடியாக விளையாடாவிட்டால் இம்முறையும் இந்தியாவை தாங்கள் தோற்கடிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த 2 ஃபைனல்களிலும் இந்தியாவை அடித்து நொறுக்கி ஆட்டநாயகன் விருது வென்று அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது நன்றாக நல்ல ஃபைனலாக இருக்கும். குறிப்பாக கடந்த 2 ஃபைனல்களில் என்ன நடந்தது என்பதை வைத்து இந்தியாவில் இருக்கும் அனைவரும் அதை விரும்புவார்கள். எனவே ஏதோ ஒரு தருணத்தில் இந்தியா அதற்கு பழிவாங்க விரும்புவார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன்”

- Advertisement -

“நிலைமை அப்படியாக இருந்தால் அது நன்றாக இருக்கும். அதில் நாங்கள் இருப்போம் என்று நம்புகிறோம். நீங்களும் அங்கே இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அந்தத் தோல்விகளுக்காக ரோகித் சர்மா அதிகம் கவலைப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. நீண்ட காலம் நல்ல கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் சிறப்பான வீரர்”

இதையும் படிங்க: காசு சம்பாரிக்க ரசிகர்களிடம் 25 டாலர் கையேந்துவீங்களா.. மானம் போயிருக்கும்.. பாகிஸ்தானை விளாசிய ரசித் லதீப்

“எனவே இந்திய அணியில் எந்த பிரச்சனையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்தியா நல்ல கைகளிலேயே இருக்கிறது. அதிரடியான கிரிக்கெட்டை விளையாடுவது அவர்களுக்கு முக்கியம். விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ராவை கொண்ட இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு போட்டியிடும் 3 – 4 அணிகளை போலவே அவர்களுக்கும் வாய்ப்பு அதிகம்” என்று கூறினார்.

Advertisement