காசு சம்பாரிக்க ரசிகர்களிடம் 25 டாலர் கையேந்துவீங்களா.. மானம் போயிருக்கும்.. பாகிஸ்தானை விளாசிய ரசித் லதீப்

Rashid Latif
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் போட்டியிட துவங்கியுள்ளன. இந்த தொடரில் 2009க்குப்பின் 15 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. முன்னதாக சமீப காலங்களாகவே பாகிஸ்தான அணி நிறைய தோல்விகளையும் பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது என்று சொல்லலாம்.

குறிப்பாக கடந்த வருடம் நடைபெற்ற 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் வீழ்ந்த சந்தித்த பாகிஸ்தான் முதல் முறையாக ஆப்கானிஸ்தானிடமும் தோல்வியை சந்தித்து வெளியேறியது. அத்துடன் தற்போது பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. அதனால் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் போது தங்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று பாகிஸ்தான் வீரர்கள் புகார் செய்தனர்.

- Advertisement -

25 டாலர்கள்:
அத்துடன் நாட்டுக்காக இலவசமாக விளையாட தயாராக இருக்கிறோம். ஆனால் ஸ்பான்சர்சிப் லோகோவை தங்களுடைய ஜெர்ஸியில் அணிந்து விளையாட மாட்டோம் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்த சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அமெரிக்காவில் பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணியின் நட்சத்திர வீரர்களை சந்திப்பதற்கு அந்நாட்டு வாரியம் ரகசியமான டின்னர் நடத்தியதாக முன்னாள் வீரர் ரசித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த பார்ட்டியில் ஒவ்வொரு ரசிகரிடம் இருந்தும் தலா 25 டாலர்கள் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அப்படி பணம் சம்பாதிப்பதற்காக ரசிகர்களிடம் பாகிஸ்தான் வீரர்கள் கையேந்தியது வெளியில் தெரிந்திருந்தால் மானம் போயிருக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அங்கே சில அதிகாரப்பூர்வ டின்னர் இருப்பது வழக்கமாகும். ஆனால் இம்முறை அங்கே தனிப்பட்ட டின்னர் நடத்தப்பட்டது. இந்தக் கொடுமையான விஷயத்தை யாரால் செய்ய முடியும்? அதாவது நீங்கள் எங்களுடைய வீரர்களை பார்ப்பதற்காக 25 டாலர்கள் வாங்கினீர்கள். கடவுள் இல்லை. நல்லவேளையாக இதில் ஒரு குழப்பம் ஏற்பட்டிருந்தால் நமது வீரர்கள் இப்படியும் பணம் சம்பாதிக்கிறார்களா? என்று மக்கள் சொல்லியிருப்பார்கள்”

இதையும் படிங்க: 2006இல் டிராவிட் தான் இருந்தாரு.. கஷ்டமா இருக்கு.. போகாதீங்கன்னு சொன்னேன் ஆனா.. ரோஹித் உருக்கம்

“பாகிஸ்தான் வீரர்கள் யார் அழைத்தாலும் எவ்வளவு பணம் தருவீர்கள்? என்று தான் மக்கள் என்னிடம் கேட்கின்றனர். எங்கள் காலத்தில் 2 – 3 டின்னர் சாப்பிட்டோம். அவை அதிகாரப்பூர்வமானவை. ஆனால் இங்கே உலகக் கோப்பையை முன்னிலைப்படுத்தி வீரர்களை வைத்து 25 டாலர்கள் அப்பட்டமாக பெறக்கூடாது. நீங்கள் கலந்து கொள்ளும் டின்னர் என்பது தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் இருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை வைத்து இப்படி தனிப்பட்ட டின்னர்களை நடத்தும் தவறுகளை செய்யாதீர்கள்” என்று கூறினார்.

Advertisement