இந்த ரிஸ்க் எடுத்து ஃபார்முக்கு வந்துட்டேன்.. இனிமேல் இந்தியாவுக்கு அடி தான்.. ஆட்டநாயகன் ஹெட் நம்பிக்கை

Travis Head 3
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் மோசமாக விளையாடிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவாக நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடி 180, 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக நித்திஸ் ரெட்டி இரண்டு இன்னிங்ஸிலும் தலா 42 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 337 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

ஆட்டநாயகன் ஹெட்:

அதிகப்பட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு பந்து வீச்சில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 19 ரன்கள் இலக்கை எளிதாக துரத்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக ஸ்டார்க் 8, கேப்டன் கமின்ஸ் 7 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இந்த வெற்றிக்கு 140 ரன்கள் குவித்து சதத்தை அடித்து முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் சமீப காலங்களில் தடுமாறிய தாம் இந்தியாவுக்கு எதிராக ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக ஹெட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இரண்டாவது புதிய பந்தில் இந்தியாவுக்கு எதிராக கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். இதே ஃபார்மில் எஞ்சிய தொடரிலும் இந்தியாவை அடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஃபார்முக்கு வந்துட்டேன்:

“மீண்டும் ரன்கள் குவித்தது நன்றாக இருக்கிறது. கடந்த வாரத்திலிருந்து நாங்கள் நகர்ந்து வந்தோம். தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன். எங்களுடைய அணியும் நன்றாக இருக்கிறது. எதுவும் கேரண்டியாக இருக்க முடியாது. ஆனால் எங்களுக்கு நல்ல வேகம் கிடைத்துள்ளது. அதே வேகத்துடன் நாங்கள் இத்தொடரில் முன்னோக்கி செல்ல வேண்டும்”

இதையும் படிங்க: இரண்டாவது போட்டியில் நாங்க மீண்டு வந்து இந்திய அணியை வீழ்த்த இதுதான் காரணம் – பேட் கம்மின்ஸ் பேட்டி

“இரண்டாவது புதிய பந்தில் ரிஸ்க் எடுத்து விளையாடுவதற்கு நல்ல வாய்ப்பு இருந்ததாக நான் கருதினேன். அது நன்றாக வேலையும் செய்தது. சதம் அடித்த போது அப்படி கொண்டாடியது என்னுடைய புதிதாக பிறந்த மகனுக்கானது. அதே போல மில்லருக்கும் (முதல் மகன்) செய்தேன். எனது குடும்பம் இங்கே இருந்தது மிகவும் நன்றாக இருந்தது. இந்த வாரம் நன்றாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement