இரண்டாவது போட்டியில் நாங்க மீண்டு வந்து இந்திய அணியை வீழ்த்த இதுதான் காரணம் – பேட் கம்மின்ஸ் பேட்டி

Cummins
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது தோல்வியை சந்தித்த வேளையில் தற்போது இரண்டாவதாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாளான இன்று பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்திய அணியை வீழ்த்த இதுதான் காரணம் :

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தற்போது சமநிலையை எட்டியுள்ளதால் அடுத்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 180 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்ததால் இந்திய அணியை விட 157 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 175 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக 19 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை வெகு எளிதாக கடந்த ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே இந்த வாரம் மிகச் சிறப்பாக இருந்தது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோல்வியை சந்தித்த நாங்கள் தற்போது மீண்டும் மிகச் சிறப்பாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளோம். மிட்சல் ஸ்டார்க் இந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். எப்போதுமே அவர் எங்கள் அணிக்கு ஒரு முக்கிய வீரராக கடந்த 10 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் – ரோஹித் சர்மா வருத்தம்

அதேபோன்று பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் இந்த மைதானத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இங்கு நிறைய ரன்களை குவித்திருக்கும் அவர் மீண்டும் இம்முறையும் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த வெற்றி கிடைத்தது என ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement