இந்திய ரசிகர்களை மதிக்கிறேன்.. இதை பாத்தா இந்தியாவை அடிக்க முடியாது.. ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் பேட்டி

Travis Head
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் இந்திய ரசிகர்களுக்கு பிடிக்காத ஒருவராக அறியப்படுகிறார். ஏனெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அதிரடியான சதத்தை அடித்த அவர் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல உதவினார். அந்த ரணம் ஆறுவதற்குள் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் சதத்தை நொறுக்கிய அவர் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய கோப்பையை தட்டிச் செல்ல உதவினார்.

அப்படி ஒரே வருடத்தில் 2 முறை கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்த அவர் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் 2 சதங்களை அடித்தார். அதனால் 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவிடம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா கோட்டை விட்டது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா முதல் முறையாக வெளியேறியது.

- Advertisement -

பிடிக்காத ஹெட்:

அதன் காரணமாக ஏராளமான இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி பல்வேறு வகைகளில் பேசுவது வழக்கமாகும். அப்படிப்பட்ட ஹெட் தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய ரசிகர்கள் தம்மை வெறுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலியாவுக்காக மகிழ்ச்சியுடன் இந்தியாவை அடித்து நொறுக்குவதே தமது வேலை என்று ஹெட் கூறியுள்ளார்.

அதே சமயம் இந்திய ரசிகர்களையும் இந்தியாவையும் தாம் மதிப்பதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி ஹெட் பேசியது பின்வருமாறு. “அது எப்படி வருகிறதோ அப்படியே எடுத்துக் கொள்கிறேன். இந்தியா இவ்வளவு பெரிய நாடாகவும் பெரிய ரசிகர்களைக் கொண்டதாகவும் இருப்பதை மதிக்கிறேன். அவர்களுக்கு எதிராக ஓரிரு இரு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய எனக்கு மிகவும் அதிர்ஷ்டம்”

- Advertisement -

ஹெட் கருத்து:

“அது என்னுடைய இயல்பில் இல்லை. எனவே அதை நான் மகிழ்ச்சியான முறையில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் எனது செயல்பாடுகள் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசுவது வேடிக்கையானதாக இருக்கிறது”

இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

“ஆனால் இனிமேலும் அது என்னை தூண்டப் போவதில்லை. களத்திற்குச் சென்று எனக்கு நானே மகிழ்ச்சியுடன் விளையாட முயற்சிப்பேன். கடந்த 18 மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக சில தருணங்களில் நான் மிகவும் நன்றாக விளையாடினேன். அதே சமயம் இந்தியாவும் எங்களுக்கு எதிராக சில நேரங்களில் நன்றாக விளையாடியுள்ளது. இதுவே இந்திய ரசிகர்களுடன் என்னுடைய உறவு என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement