
பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா தங்களை குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது. அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக இந்திய அணியை அபாரமாக வழி நடத்தி 8 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.
அதே போல பேட்டிங்கில் விராட் கோலி சதத்தை அடித்து ஃபார்முக்கு ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோரும் அபாரமாக விளையாடினார்கள். அந்த உத்வேகத்துடன் இரண்டாவது போட்டியிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி தாங்கள் எதிர்பாராத நேரத்தில் அடித்து தோல்வியை கொடுத்ததாக டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
எனவே 2வது போட்டியில் பெரிய மாற்றங்களை செய்யாமல் தங்களுடைய அடிப்படை திட்டத்தை பின்பற்றி புத்துணர்ச்சியுடன் விளையாடினாலே இந்தியாவை வீழ்த்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பந்தை கடினமாக பார்த்து புத்துணர்ச்சியுடன் விளையாடுவதற்கான குறிப்புடன் தயாராக இருக்கும் போது நான் சிறந்தவன்”
“பும்ராவை இதற்கு முன் சில முறை நான் சந்தித்தது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். தற்போது அவர் கொஞ்சம் அக்ராஸ் பகுதியில் எனக்கு எதிராக வருகிறார். எனவே சமீப காலங்களைப் போல அவரை மீண்டும் நன்றாக எதிர்கொண்டால் போதும். முதல் போட்டியில் நாங்கள் சந்தித்த தோல்வி சில நாட்கள் மீண்டு வருவதற்கு தேவைப்படுவதை போன்ற ஒன்றாகும்”
“அதே சமயம் நாங்கள் அந்த போட்டியில் அதிகப்படியாக தோற்கடிக்கப்பட்டோம். எனவே அந்த தோல்விக்கு எது காரணம் என்று உணர்வது எங்களுக்கு மிகவும் எளிது. அதைப் புரிந்து கொண்டு தற்போது நாங்கள் 3 – 4 நாட்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வேலைகளையும் பயிற்சிகளையும் எடுப்பதில் உறுதியாக இருக்கிறோம். அது மிகப்பெரிய மாற்றமாக இருக்காது”
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் – ராகுலை பிரிக்காம.. ரோஹித் சர்மா இந்த கஷ்டம் இல்லாத இடத்தில் ஆடனும்.. தேவங் காந்தி அட்வைஸ்
“அடுத்த போட்டியில் என்ன சவால்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு கொஞ்சம் எனர்ஜியுடன் நன்றாக விளையாடுவதற்காக முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார். இதை அடுத்து 2வது போட்டி அடிலெய்ட் நகரில் நவம்பர் 6ஆம் தேதி பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வெற்றி கண்டு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.