ஜெய்ஸ்வால் – ராகுலை பிரிக்காம.. ரோஹித் சர்மா இந்த கஷ்டம் இல்லாத இடத்தில் ஆடனும்.. தேவங் காந்தி அட்வைஸ்

Devang Gandhi
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக அடிலெய்ட் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழி நடத்த உள்ளார்.

முதல் போட்டியில் சொந்தக் காரணத்திற்காக விலகிய அவருக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தற்போது ரோகித் சர்மா வந்துள்ளதால் பேட்டிங்கில் எங்கே விளையாடப் போகிறார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் முதல் போட்டியில் அவருக்கு பதிலாக விளையாடிய ராகுல் 26, 77 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஃபார்முக்கு வந்துள்ளார்.

- Advertisement -

ரோஹித் பேட்டிங்:

மேலும் ஜெய்ஸ்வால் – ராகுல் ஆகியோர் 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் போட்டிலேயே செட்டிலான ஜோடியாக உருவெடுத்துள்ளார்கள். அதன் காரணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவர்களைப் பிரிக்க விரும்பாத ரோகித் சர்மா நான்காவது இடத்தில் விளையாடினார். ஆனால் இரண்டாவது போட்டியில் விராட் கோலி நான்காவது இடத்தில் வழக்கம் போல விளையாடுவார்.

அதனால் ரோஹித் எங்கே விளையாடுவார் என்ற கேள்வி காணப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா அணியின் நலனுக்காக 6வது இடத்தில் விளையாட வேண்டுமென முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வாளர் தேவங் காந்தி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா ஆறாவது இடத்தில் விளையாட வர வேண்டும் என்று நான் கருதுகிறேன்”

- Advertisement -

6வது இடத்தில் ரோஹித்:

“ஏனெனில் ரிஷப் பண்ட் 5வது இடத்தில் மிகவும் வடிவமாக செயல்படுகிறார். அங்கே ரோஹித் சர்மா களமிறங்கினால் இடது வலது கை பேட்ஸ்மேன்கள் ஜோடியும் உருவமாகும். பொதுவாக மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன் திடீரென தனது கேரியரின் கடைசி காலங்களில் துவக்க வீரராக களமிறங்குவது மிகவும் கடினம்”

இதையும் படிங்க: இந்த மாற்றத்தை செஞ்சா போதும்.. 2025இல் பும்ராவை நாம தெறிக்க விடலாம்.. இங்கிலாந்துக்கு மைக்கேல் வாகன் ஆலோசனை

“ஆனால் துவக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா இவ்வளவு அனுபவத்தைக் கொண்டிருக்கும் போது மிடில் ஆர்டரில் விளையாடுவது அவ்வளவு கடினம் அல்ல. சொல்லப்போனால் ரோகித் சர்மா தம்முடைய கேரியரை 6வது இடத்தில் களமிறங்கி தான் துவக்கினார்” என்று கூறினார். கடைசியாக 2018 – 19 ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மா 6வது இடத்தில் பேட்டிங் செய்தார். அந்த வாய்ப்பில் 2 போட்டிகளில் அவர் 37, 1, 63*, 1 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement