இந்த மாற்றத்தை செஞ்சா போதும்.. 2025இல் பும்ராவை நாம தெறிக்க விடலாம்.. இங்கிலாந்துக்கு மைக்கேல் வாகன் ஆலோசனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெல்வதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினார். குறிப்பாக முதல் இன்னிங்சில் 150க்கு ஆல் அவுட்டான இந்தியா பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா இந்தியாவின் வெற்றிக்கு கேப்டனாக முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படி தெறிக்க விடும் வகையில் பந்து வீசிய பும்ரா உலகின் சிறந்த பவுலராக இருப்பதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் அவரை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட எதிரணி வீரர்களே பாராட்டுகிறார்கள்.

- Advertisement -

பும்ராவை எதிர்கொள்ள:

இந்நிலையில் 2025ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் பும்ராவை சிறப்பாக எதிர்கொள்ள கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“அடுத்த வருடம் நடைபெறும் தொடரில் எளிமையான மாற்றத்தை செய்வது இங்கிலாந்துக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு டாப் 3 வீரர்களில் இன்னும் ஒருவர் இடது கை பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்பதை நான் பார்த்தேன். ஏனெனில் பும்ரா புதிய பந்தை வலது கை பேட்ஸ்மேன்களின் கால்கள் நோக்கி எடுத்து வருகிறார்”

- Advertisement -

மைக்கேல் வாகன் ஆலோசனை:

“அதனாலேயே அவர் நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை தெறிக்க விடும் அளவுக்கு பந்து வீசினார். எனவே இடது கை பேட்ஸ்மேன்கள் தான் பும்ராவை எதிர்கொள்ள பொருத்தமானவர்கள். நானாக இருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் கூட பென் ஸ்டோக்ஸ் மூன்றாவது இடத்தில் விளையாட வைப்பேன்”

இதையும் படிங்க: பிரைம்மினிஸ்டர் அணிக்கெதிரான பயிற்சி போட்டியை தவிர்த்த விராட் கோலி – கையில் எடுத்த யுக்தி

“அப்போது ஆஸ்திரேலியா அவருக்கு எதிராக நேதன் லயனை கொண்டு வர விரும்புவார்கள். அப்படியானால் பந்து சுழலக்கூடிய அந்த நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் குறுகிய சாளரத்தில் பவுலிங் செய்ய மாட்டார்கள்” என்று கூறினார். இதை அடுத்து இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement