- Advertisement -
இந்திய கிரிக்கெட்

0, 0, 0.. ஹாட்ரிக் கோல்டன் டக்.. திட்டமற்ற இந்தியாவை மீண்டும் நொறுக்கிய ஹெட்.. தனித்துவ உலக சாதனை

காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 14ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா 21, நாதன் மெக்ஸ்வீனி 9 ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார்கள்.

அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 12 ரன்களில் நிதிஷ் ரெட்டி வேகத்தில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் – ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நங்கூரமாக விளையாடினார்கள். அதில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஹெட் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களை குவித்து அரை சதத்தை தொட்டார்.

- Advertisement -

ஹெட் அபாரம்:

அரை சதம் கடந்த பின் வேகத்தை அதிகரித்த அவர் மீண்டும் இந்திய பவுலர்களை அடித்து சதத்தை பதிவு செய்தார். இத்தனைக்கும் காபா மைதானத்தில் கடைசியாக விளையாடிய 3 இன்னிங்ஸில் அவர் முறையே 0, 0, 0 என முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி இருந்தார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரே போட்டியில் 2 முறை கோல்டன் டக் அவுட்டானார்.

அப்படியிருந்தும் இப்போட்டியில் சுமாராக பந்து வீசிய இந்தியாவை மீண்டும் அடித்த நொறுக்கிய அவர் காபாவில் ஃபார்முக்கு திரும்பி சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக ஒரு காலண்டர் வருடத்தில் குறிப்பிட்ட மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் 2 முறை டக் அவுட்டாகி மற்றொரு போட்டியில் சதத்தை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் உலக அளவில் 5வது வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்தார்.

- Advertisement -

திறமையற்ற இந்தியா:

அத்துடன் ஒரு காலண்டர் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி அதே மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் சதத்தை அடித்த முதல் வீரர் என்ற தனித்துவ உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அவருடன் சேர்ந்து விளையாடும் ஸ்மித் 65* ரன்கள் குவித்துள்ளார். அதனால் இரண்டாவது நாள் தேநீர் இடைவெளியில் ஆஸ்திரேலியா 234-3 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலி போல செய்த சிராஜ் மேஜிக்கை மாற்றி வலையில் விழுந்த லபுஸ்ஷேன்.. இந்தியா வெல்லுமா

மறுபுறம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் சதமடித்த ஹெட் இந்தியாவை தோற்கடித்தார். அப்படி இருந்தும் அவரை விரைவாக அவுட்டாக்கும் திட்டம் இல்லாமல் இந்தியாவும் ரோஹித் சர்மாவும் மண்ணை கவ்வி வருகிறார்கள். அதனால் இந்தப் போட்டியில் இந்தியாவை மழை வந்து தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -