- Advertisement -
உலக கிரிக்கெட்

ஆஸிக்கு 17.35 கோடி நஷ்டம்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. டிராவிஸ் ஹெட் கலகலப்பான பேட்டி

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. வெறும் 2 நாட்களில் முடிந்த அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை 132 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 40 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது.

இருப்பினும் 2வது இன்னிங்ஸில் 164 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை மிகுந்த சவாலாக பார்க்கப்பட்ட பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா சேசிங் செய்வதற்கு திண்டாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஓப்பனிங்கில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் இங்கிலாந்தை அடித்து நொறுக்கி 69 பந்துகளில் சதத்தை அடித்தார்.

- Advertisement -

ரசிகர்களிடம் மன்னிப்பு:

மேலும் 16 பவுண்டரி 4 சிக்ஸரை பறக்க விட்ட அவர் 148.19 ஸ்ட்ரைக் ரேட்டில் 123 (83) ரன்கள் விளாசி இங்கிலாந்தை தோற்கடித்தார். அப்படி சவாலான பிட்ச்சில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடுகிறோம் என்று சொல்லக்கூடிய இங்கிலாந்துக்கு உண்மையான அதிரடியைக் காண்பித்தார். மேலும் சில சாதனைகளையும் படைத்த அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அப்போது 3வது நாளுக்காக டிக்கெட்டை வாங்கி காத்திருந்த 60,000 ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாக ஹெட் கலகலப்பாக தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வாவ் இந்த 2 நாட்கள் நம்ப முடியாததாக இருந்தது. முதல் நாள் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. இங்கிலாந்து முதல் நாளில் உண்மையாகவே சிறப்பாக விளையாடி எங்களை இழுத்தார்கள்”

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு நஷ்டம்:

“ஆனால் அவர்களிடம் நாம் போட்டியை விட்டுவிடக்கூடாது என்பது எங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அணியின் வெற்றிக்காக பங்காற்றியது மிகவும் சிறந்தது. அனைத்துமே வேகமாக முடிந்து விட்டது. இது போன்ற வெற்றியை 2 நாட்களுக்குள் பெற்று வருவது அபாரமானது. நாளை டிக்கெட்டுகளை வாங்கிய 60,000 ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறினார். இந்நிலையில் பெர்த் போட்டி 2 நாட்களிலேயே முடிந்ததால் ஆஸ்திரேலியா வாரியத்திற்கு சுமார் 3 ஆஸ்திரேலிய மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 428 ரன்ஸ்.. இந்தியாவை ஆட்டிப் பார்க்கும் தெ.ஆ தமிழக வீரர் முத்துசாமி.. க்ளூஸ்னர், டீ காக் வரலாற்று சாதனை சமன்

பெர்த் போட்டியில் முதல் நாளில் 51531, 2வது நாளில் 49,983 ரசிகர்கள் வந்து ஆட்டத்தைக் கண்டுகளித்தனர். 2 நாட்களிலேயே ஆட்டம் முடிந்ததால் 3 மற்றும் 4வது நாட்களுக்காக விற்கப்பட்டிருந்த டிக்கெட் தொகை விதிமுறைப்படி மீண்டும் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனால் ஆஸ்திரேலியா வாரியத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 17.35 கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஏபிசி இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -