428 ரன்ஸ்.. இந்தியாவை ஆட்டிப் பார்க்கும் தெ.ஆ தமிழக வீரர் முத்துசாமி.. க்ளூஸ்னர், டீ காக் வரலாற்று சாதனை சமன்

Senuran Muthusamy
- Advertisement -

கொல்கத்தாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அடுத்ததாக 2வது போட்டி நவம்பர் 22ஆம் தேதி அசாம் மாநிலம் கௌஹாத்தியில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் தென் ஆப்பிரிக்காவுக்கு 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஐடென் மார்க்ரம் 38 ரன்னில் பும்ரா வேகத்தில் அவுட்டானார்.

அவருடன் இணைந்து விளையாடிய ரியன் ரிக்கல்டன் 35 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் சுழலில் அவுட்டானார். அடுத்ததாக மூன்றாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் பவுமா 41 ரன்களில் ஜடேஜா சுழலில் விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 49 ரன்கள் குவித்து அவுட்டானர்.

- Advertisement -

ஆட்டிப் பார்க்கும் முத்துசாமி:

மிடில் ஆர்டரில் டோனி டீ ஜோர்சி 28, வியான் முல்தர் 13 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் 7வது களமிறங்கிய ஆல் ரவுண்டர் சீனுரான் முத்துசாமி நங்கூரமாக விளையாடினார். அவருடன் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கெய்ல் வெர்ரைன் 45 ரன்கள் குவித்து ஜடேஜா சுழலில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த மார்க்கோ யான்சன் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அசத்திய முத்துசாமி அரை சதத்தை அடித்தார். நேரம் செல்ல செல்ல இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய அவர் 10 பவுண்டரி 2 சிக்சருடன் சதத்தை அடித்தார். அவருடைய அற்புதமான ஆட்டத்தால் 2வது நாள் உணவு இடைவேளையில் 428/7 ரன்களை எடுத்துள்ள தென்னாப்பிரிக்கா வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது.

- Advertisement -

அபாரமான சாதனை:

களத்தில் இந்திய அணியை ஆட்டிப் பார்க்கும் முத்துசாமி 107*, யான்சென் அரை சதத்தை அடித்து 51* ரன்களுடன் உள்ளார்கள். இந்தப் போட்டியின் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது இடத்தில் களமிறங்கி சதத்தை அடித்த தென் ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை முத்துசாமி சமன் செய்துள்ளார். இதற்கு முன் 1997 கேப் டவுன், 2019 புனே டெஸ்ட் போட்டிகளில் லன்ஸ் க்ளூஸ்னர் மற்றும் குயின்டண் டீ காக் ஆகியோரும் அந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இங்கிலாந்தின் இந்த முட்டாள்தனம் இந்தியா, ஆஸியிடம் வேலையாகாது.. 40 லீடை சீரியஸா எடுத்துக்கல.. பாய்காட் விளாசல்

தமிழ்நாட்டைச் சேர்ந்து அவருடைய குடும்பம் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளதால் முத்துசாமி அந்நாட்டுக்காக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் கடந்த மாதம் பாகிஸ்தானில் அவர் 80+ ரன்கள் அடித்து அசத்தினார். தற்போது இந்தியாவில் அவர் இந்தியாவுக்கு எதிராக சதத்தை அடித்து தம்முடைய திறமையைக் காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement