தோனி – கார்த்திக் இன்று மோதல்..! சென்னை அணியில் இணையும் அதிரடி வீரர் – யார் தெரியுமா ?

- Advertisement -

தொடர் வெற்றிகளை குவித்து வரும் தோனி தலைமையிலான சென்னை அணி 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில உள்ளது. மேலும் இன்று கொல்கத்தாவை சந்திக்க உள்ள சென்னை அணி தனது வெற்றியை தொடருமா என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.மேலும் இரண்டு போட்டிக்கு பிறகு களமிறங்கும் சாம் பில்லிங்ஸ் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

chahar1

- Advertisement -

இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபில்-லின் 33 வது சென்னை மற்றும் கொல்கத்தா அணி பல பரீட்சை செய்யவுள்ளது. ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதிய முதல் போட்டி சென்னையில் நடந்தது இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்த போட்டியில் சென்னை வீரர் சாம் பில்லிங்ஸின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளில் 56 ரன்களை குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.இதனால் சென்னை அணி 19.5 ஒவேர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை குவித்து அபார வெற்றிபெற்றது.

kolkatta

அந்த போட்டிக்கு பிறகு வந்த போட்டிகளில் இவர் சரியாக ஜொலிக்கவில்லை. தனது முதல் போட்டிக்கி பிறகு 5 போட்டிகளில் ஆடிய பில்லிங்ஸ் அந்த 5 போட்டிகளில் 24 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆக இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 80 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். எனவே கடந்த இரண்டு போய்ட்டிகளிலும் இவர் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் கொல்கத்தா அணிக்கு எதிராக இவர் சிறப்பாக ஆடியதால் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அவர் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்

Advertisement