சர்வேதச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த டாப் 10 வீரர்கள். அதுல ஒருத்தர் இந்திய வீரர் – விவரம் இதோ

Raina
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் கேட்ச் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு சில கேட்ச்கள் போட்டியையோ அல்லது தொடரையோ தீர்மானிக்க கூடிய அளவிற்கு இருக்கும். கேட்ச்கள் ஒரு போட்டியில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் அதிக கேட்ச்கள் பிடித்த டாப்-10 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்

ponting

ஆலன் பார்டர் :

- Advertisement -

இவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் .429 போட்டிகளில் விளையாடி மற்றும் 289 கேட்ச்கள் பிடித்துள்ளார். இவருடைய காலத்தில் பீல்டிங்கிற்கு மிகவும் பெயர் போனவர். இவர் தற்போது வரை இவர் பிடித்த ஒரு சில கேட்ச்கள் நினைவு கூறப்படுகிறது.

பிரையன் லாரா :

- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் வீரரான இவர் 430 போட்டிகளில் விளையாடி 284 கேட்ச்கள் பிடித்துள்ளார். இவர் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த வீரராகவும் இருந்துள்ளார்.

மார்க் வாக் :

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கிங் தம்பி இவர். இவர் 372 போட்டிகளில் விளையாடி 289 கேட்ச்கள் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 181கேட்ச்கள் பிடித்துள்ளார். இந்த சாதனையை கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய வீரர் ராகுல் டிராவிட் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

கிரேம் ஸ்மித் :

- Advertisement -

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் இவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு மிக இளம் வயதிலேயே தலைமை தாங்கியவர் இவரே. மேலும் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஒரு கேப்டனாக வெற்றி பெற்றவரும் இவரே. இவர் 347 போட்டிகளில் விளையாடி 292 இவரே பிடித்துள்ளார்.

Jayawardene

ஸ்டீபன் பிளமிங் :

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் இவர் முன்னாள் நியூசிலாந்து வீரர் ஆவார். இவர் நியூசிலாந்தில் கேப்டனாகவும் இருந்துள்ளார். இவர் மொத்தம் 328 கேட்ச்கள் பிடித்துள்ளார். பலமுறை ஒரே போட்டியில் 4 கேட்ச்கள் பிடித்து அசத்தியுள்ளார்.

ராஸ் டைலர் :

நியூசிலாந்து அணியின் ஒரு மிகச்சிறந்த வீரர் இவர். இவர் 433 போட்டிகளில் விளையாடி 332 கேட்ச்கள் பிடித்துள்ளார். ஒரே போட்டியில் 4 கேட்ச் என நான்கு முறை பிடித்துள்ளார். மிகவும் அபாயகரமான பகுதியில் நின்று பெரும்பாலான கேட்ச்கள் இவர் பிடித்துள்ளார். இவர் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதால் பலரது சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.

rahul-dravid

ராகுல் டிராவிட் :

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த டிராவிட். மொத்தம் 550 போட்டிகளில் விளையாடி 334 கேட்ச்கள் பிடித்துள்ளார்.

ஜாக் காலிஸ் :

தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் இவர். மொத்தம் 519 போட்டிகளில் விளையாடி 338 கேட்ச்கள் பிடித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் :

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இவர். நெருக்கமான இடத்தில் நின்று எளிதாக கேட்ச் பிடிப்பதில் கில்லாடி. ஸ்டம்புகளை பார்த்து சரியாக அடிப்பதில் இவர் கில்லாடி. இவர் மொத்தம் 364 காட்சிகள் பிடித்துள்ளார்

மகிளா ஜெயவர்தனே :

இலங்கை அணியின் முன்னாள் வீரர். இவர் பேட்டிங்கில் அந்த நாட்டின் ஜாம்பவான் வீரர். பேட்டிங்கில் மட்டுமல்ல பீல்டிங்கில் இவர் செய்த சாதனைகள் பல உள்ளது. இவர் மொத்தம் 560 போட்டிகளில் விளையாடி 440 கேட்ச்கள் பிடித்துள்ளார்.

Advertisement