ஐ.பி.எல் ஏலம் 2020 : அதிக கோடிகளுக்கு விலைபோன டாப் 10 வீரர்கள் – முழுவிவரம் இதோ

auction-1

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2020 ஐ.பி.எல் கோப்பைக்கான வீரர்களின் ஏலம் நேற்று 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த இந்த ஏலத்தில் டாப் 10 இடங்களில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்கள் குறித்த பட்டியல் இதுதான். அதன்படி இந்த டாப் 10 வீரர்களில் வெளிநாட்டு வீரர்களான 9 பேர் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்கள். இந்தியாவைச் சேர்ந்த பியூஸ் சாவ்லா மட்டும் டாப் 10 இடங்களில் அதிக விலைக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போனவர் பட்டியலின் முதல் இடத்தில ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பேட் கம்மின்ஸை (15.50 கோடி )கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. அதற்கடுத்து மேக்ஸ்வெல் (10.75) கோடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கிரிஸ் மோரிஸ் 10 கோடி பெங்களூர் அணியும வாங்கியது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் காட்ரெல் (8.50 கோடி) ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. அதேபோன்று ஹெட்மயரை (7.75 கோடிக்கு) டெல்லி அணி வாங்கியது. இந்த பட்டியலில் சென்னை அணி (6.75 கோடி) கொடுத்து பியூஸ் சாவ்லாவை எதற்கு வாங்கினார்கள் என்று தான் அனைவரும் புலம்பி வருகின்றனர்.