நல்ல திறமை இருந்தும், ஸ்டார் பிளேயர்ஸ்ஸாக இருந்தும் இந்த ஐ.பி.எல் தொடரில் வெளியில் அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார்கள் – லிஸ்ட் இதோ

Pujara

நடப்பு ஐபிஎல் தொடரானது கடந்த 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இத்தொடரில் திறமைகள் இருந்தும் தங்களுடைய அணிக்காக விளையாட இன்னமும் வாய்ப்பு கிடைக்காமல் பல வீரர்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு 9 மணியிலிருந்து அமலுக்கு வந்துள்ள ஐபிஎல் தொடரின் விதியான மிட் சீசன் டிரான்ஸ்பர் விதிமுறையின் மூலமாவது அந்த வீரர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ipl

மிட் சீசன் ட்ரான்ஸ்வர் என்பது ஒரு அணியில் விளையாடுவதற்கு இன்னமும் வாய்ப்பு வழங்கப்படாத வீரரை, அந்த அணியிடமிருத்து மற்ற அணிகள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த வீரர் நடப்பு தொடரில் மூன்று அல்லது அதற்கு குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடிருக்க வேண்டும். இந்த விதிமுறையின்படி கீழ்வரும் வீரர்கள் பலனடைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சென்ற ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா அந்த தொடரில் சரியாக விளையாடாத காரணத்தால் இந்த ஆண்டு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை அணிக்காக இத்தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் முதல் மூன்று போட்டிகளில் சொதப்பியபோது உத்தப்பாவிற்கு ஓப்பனிங் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்ராஜ் கெயக்வாட் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார். எனவே உத்தப்பாவிற்கு வாய்ப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உத்தப்பாவை போலவே பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட உலகின் நம்பர் ஒன் t20 ஆட்டக்காரரான டேவிட் மலான் அந்த அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

Uthappa

பஞ்சாப் அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் நிக்கோலஸ் பூரன் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையிலும் டேவிட் மலானுக்கு வாய்ப்பு வழங்காமல் இருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இடையில் கடைசியாக ஒரேயொரு வாய்ப்பினை மட்டுமே பெற்றார். ஆனால் அதனையும் கோட்டை விட இவர் மீண்டும் விளையாட வாய்ப்பில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான ஜேசன் ராய்க்கும் அந்த அணியில் இதுவரை விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் இனி வரும் போட்டிகளிலும் ஜேசன் ராய்க்கு அந்த அணியில் விளையாட வாய்ப்பு கிடைப்பது என்பது சந்தேகமே.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லோகி பர்கியூசன், இந்த தொடரில் இன்னமும் ஒரு போட்டியில் கூட அந்த அணிக்காக விளையாடவில்லை. வெளிநாட்டு வேகப் பந்து வீச்சாளர் இடத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் நிரப்பி விட்டதால், பர்கியூசனுக்கும் இனிமேல் அந்த அணியில் ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. இவர்களைப்போல் டெல்லி அணியில் சேம் பில்லிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸில் மிட்ச்செல் சாட்னர், பஞ்சாப் கிங்ஸில் மன்தீப் சிங் ஆகிய வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

ஆனால் இப்போது மிட் சீசன் ட்ரான்ஸ்வர் மூலம் சில அணிகள் மற்ற அணிகளிடம் வீரர்களை கேட்டு வருகின்றனர். குறிப்பாக நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே வைத்துக் கொண்டு விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறையில் வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து கேட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ராபின் உத்தாப்பாவை சென்னை அணியிடமிருந்து கேட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே இந்தியாவில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரளா அணியில் ராபின் உத்தப்பா விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.