டக் நாயகன்கள் : ரோஹித் முதல் ஏபிடி வரை – ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் – லிஸ்ட் இதோ

abd
- Advertisement -

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த வருடம் லக்னோ, குஜராத் ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. அதேபோல் இந்த தொடர் முழுவதும் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

Ipl cup

- Advertisement -

டக் அவுட் நாயகன்:
ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் பவுலர்களை பந்தாடும் பேட்ஸ்மேன்கள் அதிரடியான பவுண்டரிகளையும் இமாலய சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித் தருவார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்க முடிவதில்லை.

குறிப்பாக ஒரு சில நேரங்களில் 1 ரன் கூட எடுக்க முடியாமல் டக் அவுட்டாகி ஏமாற்றமடையும் தருணங்களும் உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான டாப் வீரர்களை பற்றி பார்ப்போம்.

duckout

1. 13 டக் அவுட்கள்:
1. ரோஹித் சர்மா: ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 கோப்பைகள், 5000 ரன்கள் என பல சாதனைகளை படைத்துள்ள ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபித்துள்ளார். இவ்வளவு ரன்கள் அடித்து அசத்தியுள்ள அவர் அதற்கு ஈடாக இதுநாள் வரை பங்கேற்ற 213 போட்டிகளில் 13 முறை டக் அவுட்டாகி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான டாப் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

2. அம்பத்தி ராயுடு: ஆரம்ப காலங்களில் ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி 3 சாம்பியன் பட்டங்களை வென்ற இந்திய வீரர் அம்பத்தி ராயுடு அதன்பின் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியில் விளையாடி இதுவரை 2 கோப்பைகளை வென்றுள்ளார். கடந்த 2018-க்கு பின் சென்னை அணியில் முக்கிய வீரராக உருவெடுத்துள்ள அவர் இதுவரை பங்கேற்ற 156 இன்னிங்ஸ்களில் 13 டக் அவுட்டாகி இந்த மோசமான சாதனை பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

rohith 1

3. அஜிங்கிய ரகானே: இன்று இந்திய அணியில் இருந்து காணாமல் போக துவங்கியுள்ள நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் விளையாடியுள்ளார். ஆரம்பகாலங்களில் அதிரடியாக விளையாடிய அவரும் 141 இன்னிங்ஸ்களில் 13 முறை பரிதாபமாக டக் அவுட்டாகி இந்தப் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

- Advertisement -

4. பார்திவ் படேல்: இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் தனது வாழ்நாளில் பங்கேற்ற 137 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 13 முறை ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் பரிதாபமாக அவுட்டாகி இந்தப் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

rahane

5. இவர்களுடன் ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா போன்ற இந்திய வீரர்களும் 13 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கின்றன. இருப்பினும் இவர்கள் ஒரு பவுலர்கள் என்பதால் இந்தப் பட்டியலில் இடம் பிடிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

- Advertisement -

2. 12 டக் அவுட்கள்:
1. கெளதம் கம்பீர்: இந்தியாவின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக விளையாடியதுடன் ஒரு கேப்டனாக கொல்கத்தாவுக்கு 2 கோப்பைகளை வென்று கொடுத்தவர். இருப்பினும் 154 போட்டிகளில் பங்கேற்ற அவர் 12 முறை டக் அவுட்டாகி இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்கிறார்.

Gautam Gambhir

2. தினேஷ் கார்த்திக்: ஆரம்பம் முதல் இன்றுவரை பல்வேறு ஐபிஎல் அணிகளுக்காக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். இதுவரை 192 இன்னிங்ஸ்களில் 4000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ள அவர் 12 முறை டக் அவுட்டாகி இந்தப் பட்டியலில் 2வது இடம் பிடிக்கிறார்.

3. இவர்களை போலவே இந்திய வீரர்கள் மணிஷ் பாண்டே மற்றும் மந்தீப் சிங் ஆகியோரும் முறையே 143 மற்றும் 92 இன்னிங்ஸ்களில் தலா 12 முறை டக் அவுட்டாகி இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

dinesh karthikk

3. 11 டக் அவுட்கள்:
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இதுவரை பங்கேற்ற 97 போட்டிகளில் 11 முறை டக் அவுட்டாகி உள்ளார். இதன் காரணமாக இந்த பட்டியலில் 3வது இடத்தை தன்னிச்சையாக அவர் பிடித்துள்ளார்.

4. 10 டக் அவுட்கள்:
1. ஏபி டீ வில்லியர்ஸ்: உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினாலும் அதை மைதானத்தின் நாலாபுறமும் சுழன்று அடித்து ரன்களை சேர்க்கும் திறமை பெற்ற தென் ஆபிரிக்காவின் நட்சத்திரம் ஏபி டிவில்லியர்ஸ் 170 இன்னிங்ஸ்களில் 5162 ரன்களை விளாசியுள்ளார். இருப்பினும் கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் 10 முறை டக் அவுட்டாகி இந்தப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடிக்கிறார்.

abd 1

2. ஷிகர் தவான்: இந்தியாவின் அனுபவம் வாய்ந்த அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவான் ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த வீரர், அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் போன்ற சாதனைகளை படைத்துள்ளார். இருப்பினும் 191 இன்னிங்ஸ்களில் 5784 ரன்களை அடித்துள்ள அவர் 10 முறை டக் அவுட்டாகி உள்ளதால் இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடித்துள்ளார்.

3. அமித்ஷா மிஸ்ரா: ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்துள்ள அமித் மிஸ்ரா 10 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் இடம் பிடித்தாலும் அவர் ஒரு பவுலர் என்பதால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

Advertisement