இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற 5 வீரர்கள். அதுல ஒருத்தர் இன்னும் ரிட்டயர்டு ஆகல – அது யார் தெரியுமா ?

- Advertisement -

இந்திய அணிக்காக இதுவரை 420 சர்வதேச போட்டிகளுக்கு மேல் ஆடிய இந்திய வீரர்கள் மொத்தம் ஐந்து பேர் மட்டுமே. இதில் 2 வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியதில்லை (அசாருதீன் மற்றும் கங்குலி டி20 போட்டிகளில் ஆடியது இல்லை) அதேபோன்று இந்த பட்டியலில் உள்ள ஒருவர் தற்போது வரை ஆடிக் கொண்டிருக்கிறார்.

Ganguly

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் – 664 போட்டிகள்

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார் மொத்தம் 664 சர்வதேச போட்டிகளில் ஆடி முதல் இடத்தை பிடித்துள்ளார். இத்தனை போட்டிகளிலும் சேர்த்து 34,354 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 48.52 ஆகும் . மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளிலும் 463 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் ஒரேயொரு டி20 போட்டியில் ஆடியுள்லார் சச்சின் டெண்டுல்கர்.

மகேந்திர சிங் தோனி- 538 போட்டிகள்

- Advertisement -

அடுத்த இடத்தில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். இவர் மொத்தம் 538 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவிற்காக ஆடியுள்ளார். இதன் சராசரி 44.26 ஆகும். மொத்தம் 17,266 ரன்கள் குவித்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் 4576 ரன்களும், 350 ஒருநாள் போட்டிகளில் 10,253 ரன்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ரன் 183 ஆகும். இதன் சராசரி 50.6 ஆகும். அதனை தாண்டி 98 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 1617 ரன்களை எடுத்துள்ளார். தோனி இன்றுவரை ஓய்வு பெறாமல் ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

Dhoni 1

ராகுல் டிராவிட் – 509 போட்டிகள்

- Advertisement -

இதே பட்டியலில் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவர் மொத்தம் 509 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24,208 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 45.41 ஆகும்ம். 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13,288 ரன்களும். மீதம் அனைத்தும் ஒரு நாள் போட்டிகளிலும் எடுத்துள்ளார். இவரது சராசரி 52.3 ஆகும்.

முகமது அசாருதீன் – 433 போட்டிகள்

- Advertisement -

அடுத்ததாக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இந்த இடத்தில் இருக்கிறார். இவர் மொத்தம் 433 சர்வதேச போட்டிகளில் ஆடி 16593 ரன்களை எடுத்துள்ளார்.

dravid

கங்குலி – 424 போட்டிகள்

அதற்கு அடுத்த இடத்தில் தற்போது பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இருக்கிறார் இவர் மொத்தம் 424 சர்வதேச போட்டிகளில் ஆடி 18,575 ரன்களை 41.6 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
இந்த பட்டியலில் டீ20 சர்வதேச போட்டியில் ஆடாதது ஆடாதது சவுரவ் கங்குலி மற்றும் அசாருதீன் மட்டுமே. இந்த 5 வீரர்களில் தோனி தற்போது வரை ஆடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement