2028 ஒலிம்பிக்ஸ்: பாகிஸ்தானுக்கு காத்திருக்கும் ஆப்பு.. இந்தியா உள்ளிட்ட அணிகளை அறிவித்த கமிட்டி

Cricket Olympics
- Advertisement -

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் அடுத்ததாக 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இம்முறை புதிதாக 5 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த 5 விளையாட்டுகளில் கிரிக்கெட் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக 1900ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாடப்பட்டது.

அதில் கிரேட் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய 2 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அந்தத் தொடரில் பிரான்ஸ் அணியை 158 ரன்கள் வித்தியாசத்தில் கிரேட் பிரிட்டன் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. ஆனால் அதன் பின் பல்வேறு காரணங்களுக்காக கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.

- Advertisement -

2028 ஒலிம்பிக்:

அதனால் மீண்டும் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க ஐசிசி நிறைய முயற்சிகளை எடுத்து வந்தது. அதன் பயனாக 2028 தொடரில் டி20 வடிவமாக கிரிக்கெட் விளையாடப்படும் என்று ஒலிம்பிக் வாரியம் கடந்த வருடமே அறிவித்தது. இந்நிலையை 2028 தொடரில் 6 அணிகள் விளையாடும் என்று ஒலிம்பிக் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இம்முறை ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய 2 வகையான 6 அணிகள் டி20 வடிவத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் என்று ஒலிம்பிக் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி பாகிஸ்தான் அணி 2028 ஒலிம்பிக் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஐசிசி சர்வதேச டி20 போட்டிகள் தர வரிசையில் டாப் 6 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே ஒலிம்பிக் தொடரில் விளையாடுவதற்கு அங்கீகரிக்கப்படும்.

- Advertisement -

டாப் 6 அணிகள்:

அதன் படி பார்க்கும் போது தற்சமயத்தில் பாகிஸ்தான் ஆடவர் அணி ஏழாவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் மகளிர் அணி எட்டாவது இடத்தில் உள்ளது. அதனால் பாகிஸ்தான் ஒலிம்பிக் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை தவற விடும் ஆப்பு காத்திருக்கிறது என்று சொல்லலாம். ஒருவேளை ஒலிம்பிக் வாரியம் நிர்ணயிக்கும் கால வரையறைக்குள் பாகிஸ்தான் டாப் 6 இடத்தை பிடித்தால் விளையாடும் வாய்ப்பு பெறும்.

இதையும் படிங்க: தோனி டெஸ்ட் ஆடல.. கீழ வர இதான் காரணம்.. இதுல அசத்துனா சிஎஸ்கே ஈஸியா ஜெய்க்கலாம்.. உத்தப்பா பேட்டி

மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணி சர்வதேச 20 ஓவர் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் ஜொலித்து வருகிறது. அதே போல மகளிர் சர்வதேச டி20 தர வரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய 2 வகையான ஒலிம்பிக் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு இப்போதே தகுதி பெற்றுள்ளது.

Advertisement