ஓப்பனிங்லயே மாஸ் பினிஷிங் ! ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் இழக்காமல் சேசிங் செய்யப்பட்ட டாப் 6 போட்டிகள்

Watson-2
- Advertisement -

ஐபிஎல் என்றாலே ரன் மழை அதிரடியான எதிர்ப்பாரா த்ரில்லர் திருப்பங்கள் மிரட்டலான சேசிங் போன்ற பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஒரு தொடராகும். இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் 200 ரன்களை அடித்தால் கூட வெற்றி உறுதி என்று கூற முடியாது. அந்த அளவுக்கு 2-வது இன்னிங்சில் எதிர்பாராத வகையில் அதிரடியாக பேட்டிங் செய்யும் அணிகள் மிரட்டலாக சேஸிங் செய்து வெற்றியை பறித்து ருசித்து விடும்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

- Advertisement -

அதிலும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் சேசிங் செய்வதே வெற்றிக்கான முதல் படி என்பதால் 90% போட்டிகளில் முதலில் பந்து வீச தீர்மானிப்பதை பார்த்து வருகிறோம். ஆனால் ஒரு இலக்கைத் துரத்தும் போது ஆரம்பத்திலோ அல்லது நடுவிலோ அல்லது கடைசி ஓவரில் கூட முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டால் வெற்றி பரிதாபமாக பறிபோய் விடும் என்பதால் அனைத்து நேரங்களிலும் சேசிங் என்பது சுலபமாக இருக்காது.

அப்படி சேசிங் செய்யும்போது அதை வெற்றிகரமாக முடிப்பதற்கு ஓபனிங் பார்ட்னர்ஷிப் என்பது அவசியமாகிறது. சேசிங்கின் போது ஓப்பனிங் ஜோடி குறைந்தது 50 அல்லது 100 ரன்கள் அடித்தாலே அதை வைத்து அடுத்து வரும் வீரர்கள் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினால் வெற்றி எளிதாகிவிடும். ஆனால் எப்போதாவது அரிதினும் அரிதாக மட்டுமே ஓபனிங் வீரர்களாக களமிறங்கும் இருவருமே எதிரணி பவுலர்களை பந்தாடி கடைசி வரை நின்று வெற்றியைத் தேடிக் கொடுத்து விடுவார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு விக்கெட்டை இழக்காமல் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட டாப் 6 போட்டிகளைப் பற்றி பார்ப்போம்.

6. சென்னை: 2013 ஐபிஎல் தொடரில் மொகாலியில் நடைபெற்ற பஞ்சாபுக்கு எதிரான ஒரு போட்டியில் அபாரமாக பந்து வீசிய சென்னை அந்த அணியை 138 ரன்களுக்கு சுருட்டியது. அதை தொடர்ந்து 139 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி பஞ்சாப்பை பதம் பார்த்த முரளிவிஜய் – மைக் ஹஸ்ஸி ஜோடி சரவெடியான பேட்டிங் செய்து 17.2 ஓவர்களிலேயே 139/0 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பெற்றுக் கொடுத்து இப்பட்டியலில் 6-வது இடம் பிடிக்கின்றனர். அதில் முரளி விஜய் 50* (50) ரன்கள் எடுக்க 86* (54) ரன்களை அட்டகாசமாக எடுத்த மைக் ஹஸ்சி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

5. டெக்கான் சார்ஜர்ஸ்: முதல் ஐபிஎல் தொடரான 2008இல் சச்சின் தலைமையிலான மும்பையை விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் 14-வது லீக் லீக் போட்டியில் எதிர்கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 154/7 ரன்கள் எடுக்க அதை துரத்திய டெக்கானுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய லக்ஷ்மன் – கில்கிறிஸ்ட் ஜோடி களமிறங்கியது.

Adam Gilchrist Deccan

முதல் ஓவரில் இருந்தே பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் மழை பொழிந்த அவர்கள் வெறும் 12 ஓவர்களிலேயே 155/0 ரன்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்று கொடுத்தனர். இதில் லக்ஷ்மன் 37* (26) ரன்கள் மட்டுமே எடுக்க மறுபுறம் பட்டாசாக வெடித்த கில்கிறிஸ்ட் 9 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 109* (47) ரன்கள் விளாசி அற்புதமான வெற்றிக்கு பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

4. மும்பை: 2012 ஐபிஎல் தொடரில் ராகுல் டிராவிட்டின் ராஜஸ்தானுக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த 72-வது லீக் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 163 ரன்கள் இலக்கை மும்பை தொடங்கியது. அதற்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய ட்வயன் ஸ்மித் மற்றும் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 18 ஓவர் வரை நின்று 163/0 ரன்களை எடுத்து போட்டியை பினிஷிங் செய்தனர். அதனால் மும்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில் ஒருபுறம் சச்சின் பொறுமையாக 58* (51) ரன்கள் எடுக்க மறுபுறம் 87* (58) ரன்கள் விளாசிய ஸ்மித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Padikkal

3. பெங்களூரு: கடந்த 2021 ஐபிஎல் தொடரில் நடந்த 16-வது லீக் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 177/9 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி 72* (47) ரன்கள் எடுக்க அவருடன் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்த இளம் வீரர் தேவ்தூத் படிக்கல் 11 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 101* (52) ரன்கள் விளாசினார். இந்த ஜோடியின் அதிரடியால் 16.3 ஓவர்களிலேயே 181/0 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றியை சுவைப்பதற்கு முதல் சதம் அடித்து காரணமாக படிக்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

2. சென்னை: கடந்த 2020இல் துபாயில் நடந்த பஞ்சாப்புக்கு எதிரான ஒரு ஐபிஎல் போட்டியில் அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 178/4 ரன்கள் எடுத்த நிலையில் அதைத் துரத்த சென்னை சார்பில் களமிறங்கிய ஷேன் வாட்சன் – டு பிளேஸிஸ் ஜோடி அன்றைய நாளில் விஸ்வரூபம் எடுத்து பஞ்சாப் பவுலர்களை கருணை காட்டாமல் புரட்டி எடுத்தது.

watson

முதல் ஓவரில் இருந்தே பவுண்டரிகளை தெறிக்கவிட்ட இந்த ஜோடியில் வாட்சன் 83* (53) ரன்கள் எடுக்க அவருக்கு போட்டியாக பஞ்சாப்பை பதம் பார்த்த டுப்லஸ்ஸிஸ் 87* (53) ரன்கள் விளாசி 17.4 ஓவர்களிலேயே 181/0 ரன்களை எடுத்து சென்னைக்கு அதிரடியான வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இருப்பினும் 83* ரன்கள் விளாசிய வாட்சன் ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் இந்த ஜோடி பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறது.

1. கொல்கத்தா: 2017 ஐபிஎல் தொடரில் ராஜ்கோட் நகரில் நடந்த 3-வது லீக் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் 20 ஓவர்களில் 183/4 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கெளதம் கம்பீருடன் கைகொடுத்த ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிறிஸ் லின் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்து 93* (41) ரன்கள் குவித்தார்.

Gambhir Chris Lynn Gujarat Lions

அவருக்கு ஈடு கொடுத்து குஜராத் பவுலர்களை புரட்டிய கம்பீர் 76* (48) ரன்கள் விளாசியதால் 14.5 ஓவர்களிலேயே 184/0 ரன்களை எடுத்த கொல்கத்தா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  அன்றைய நாளில் விஸ்வரூபம் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய கிறிஸ் லின் – கம்பீர் ஜோடி ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற வரலாற்றை படைத்து இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

Advertisement