இந்த ஐ.பி.எல் தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்கும் திறமையுள்ள 6 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ABD-1
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத உள்ளூர் வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக தங்கள் திறமைகளை முழுவதும் வெளிப்படுத்தி வருகிறார்கள். ராஜஸ்தான் அணியை சேர்ந்த ராகுல் திவாதியா ஆல்ரவுண்டர் திடீரென ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசி கிட்டத்தட்ட யுவராஜின் சாதனையை முறியடிக்க பார்த்தார். அப்படி இந்த வருடம் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கும் வல்லமை படைத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலைப் பார்ப்போம்

Gayle

- Advertisement -

கிறிஸ் கெய்ல் :

தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் கெயில் முதலில் கொல்கத்தா அணிக்காகவும், அதன் பின்னர் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார். 66 பந்துகளில் 175 ரன்கள் அடித்து பல சாதனைகள் படைத்து இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து துவம்சம் செய்தார். இவர் நினைத்தால் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் கூட அடிக்க முடியும்.

Pandya

ஹர்திக் பாண்டியா :

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆல்-ரவுண்டராக இவர் சர்வதேச போட்டிகளில் எளிதாக சிக்ஸர் அடிக்க கூடியவர். சர்வதேச போட்டிகளில் மட்டும் ஏழுமுறை தொடர்ந்து ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் அடித்து இருக்கிறார். இந்த வருடம் சரியான நேரம் அமையும் பட்சத்தில் எவராலும் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்க முடியும்.

Russell

ஆண்ட்ரே ரசல் :

- Advertisement -

கொல்கத்தா அணி வீரரான இவர் கடந்த மூன்று வருடங்களாக அடித்து துவம்சம் செய்து ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கும் திறமை இவருக்கு இருக்கிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைத்துவிட்டால் இவரால் கண்டிப்பாக 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் விளாச முடியும்.

ஏபி டிவில்லியர்ஸ் :

- Advertisement -

தற்போது பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் இவர் அந்த அணியின் மிக முக்கிய தூணாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் கூட 24 பந்துகளில் 55 ரன்கள் விளாசி இருந்தார். இது அவரது தற்போதைய ஆற்றல் திறனை குறிக்கிறது. இப்படியே சென்றால் இந்த வருடம் அவருக்கேற்ற பந்துவீச்சாளர் கிடைத்தால் கண்டிப்பாக 6 சிக்சர்கள் அடிக்க முடியும்.

Pollard 1

கைரன் பொல்லார்ட் :

2015ம் ஆண்டிலிருந்து இவர் பந்து வீசவில்லை என்றாலும் தொடர்ந்து நன்றாக பேட்டிங் பிடித்துக் கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை விளாசினார். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களை சிக்ஸர் அடிப்பதில் இவர் வல்லவர். இந்த வருடம் இவராலும் அந்த சாதனையைப் படைக்க முடியும்.

rohith 1

ரோகித் சர்மா :

சமீபத்தில் ஐபிஎல் தொடர்களில் 200 சிக்சர்கள் அடித்து மிகப்பெரிய சாதனை படைத்திருந்தார். இவர் துவக்க வீரர் என்பதால் ஐபிஎல் தொடரில் அதிக பந்துகள் பிடிக்க முடியும். 20 ஓவர் முழுவதும் இவரால் ஆட முடியும். சிக்சரும் அடிக்க முடியும் இவருக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறது.

Advertisement