ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் – பட்டியல் இதோ

Manish Pandey Rshapbh Pant
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. பொதுவாக இந்தியாவில் இருக்கும் பல தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த வாய்ப்புகளைக் கொடுத்து பட்டை தீட்டி உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரராக ஜொலிக்க வைக்கும் எண்ணத்திலேயே ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் பல தரமான இளம் வீரர்கள் தங்களது அபார திறமையால் தங்களது அணிகளுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நாளடைவில் இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்த நிறைய கதைகளை பார்த்துள்ளோம்.

Ipl

- Advertisement -

அதேபோல் இந்த தொடர் வெளிநாடுகளுக்கும் பல தரமான வீரர்களை கண்டறிந்த கொடுத்த பெருமையையும் பெற்றுள்ளது. இருப்பினும் ஐபிஎல் போன்ற சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஈடான மிகவும் அழுத்தம் நிறைந்த பிரம்மாண்ட தொடரில் சிறப்பாக செயல்படுவது என்பது எப்போதுமே இளம் வீரர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். அந்த வகையில் மிக இளம் வயதில் ஐபிஎல் வரலாற்றில் சதங்களை அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

5. குயின்டன் டீ காக்: தற்போது தென் ஆப்பிரிக்க அணியில் அதிரடி விக்கெட் கீப்பராக விளையாடி வரும் குயின்டன் டி காக் கடந்த 2016 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.

அப்போது பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லிக்கு வெறும் 51 பந்துகளில் 15 பவுண்டரி 3 சிக்சருடன் உட்பட சதமடித்து 108 ரன்கள் விளாசிய அவர் 3 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அப்போது 23 வருடம் 122 நாட்கள் மட்டுமே அடைந்திருந்த அவர் இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

4. சஞ்சு சாம்சன்: கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இன்று ராஜஸ்தானின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் கடந்த 2017இல் நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு அதிரடியாக விளையாடிய அவர் 8 பவுண்டரி 5 சிக்சருடன் உட்பட சதமடித்து 102 (63) ரன்கள் விளாசியதால் அந்த அணி 205/4 ரன்கள் எடுத்தது.

sanju-samson

அதை தொடர்ந்து சேசிங் செய்த புனே வெறும் 108 ரன்களுக்கு சுருண்ட காரணத்தால் 97 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு 22 வருடம் 151 நாட்கள் மட்டுமே நிரம்பியிருந்த நிலையில் சதமடித்து முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சன் இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. தேவ்தத் படிக்கல்: கடந்த 2021 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அறிமுகமாக களமிறங்கிய தேவ்தூத் படிக்கள் இம்முறை விளையாடும் ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 178 ரன்கள் இலக்கை தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி சரவெடியாக 11 பவுண்டரி 6 சிக்சர்களுடன் சதமடித்து 101 (52) ரன்கள் விளாசினார்.

Padikkal

வெறும் 20 வருடம் 289 நாட்களில் சதமடித்த அவர் பெங்களூருவின் 10 விக்கெட் வித்தியாசத்திலான அதிரடி வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்று இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

2. ரிஷப் பண்ட்: உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்தே பயமறியாத காளையாக வளர்ந்த டெல்லியைச் சேர்ந்த ரிஷப் பண்ட் இப்போதும்கூட அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அதிரடியாக பேட்டிங் செய்து எதிரணிகளை கலங்கடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2018 ஐபிஎல் தொடரில் டெல்லிக்காக விளையாடி அவர் ஹைதராபாத் அணிக்கெதிரான ஒரு போட்டியில் 15 மின்னல்வேக பவுண்டரிகளையும் 7 இமாலய சிக்ஸர்களையும் பறக்க விட்டு வெறும் 20 வருடம் 218 நாட்களில் சதமடித்து 128* (63) ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

pant

அதனால் 187/5 ரன்களை டெல்லி எடுத்த நிலையில் அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஹைதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் கூட இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கும் அளவுக்கு அந்த நாளில் ரிஷப் பண்ட் சொல்லி அடித்தது பல ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

1. மனிஷ் பாண்டே: கர்நாடகாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மனிஷ் பாண்டே கடந்த 2009 ஐபிஎல் தொடரில் நடைபெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இளம் கன்று பயமறியாது என்பது போல் 10 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட 114 (73) ரன்களை விளாசியதால் 20 ஓவர்களில் பெங்களூரு 170/4 ரன்கள் எடுத்தது.

pandey rcb

அதை தொடர்ந்து சேசிங் செய்த டெக்கான் சர்ஜர்ஸ் 158/6 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அன்றைய நாளில் வெறும் 19 வருடம் 259 நாட்களில் சதமடித்த மணிஷ் பாண்டே ஆட்டநாயகன் விருதை வென்று ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த பேட்ஸ்மேன் என்ற சரித்திர சாதனையை இன்று 10 வருடங்கள் கழித்தும் நின்று பேசும் அளவுக்கு படைத்தார்.

Advertisement