ஐ.பி.எல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு வீணாய் போன 5 முக்கிய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Jadhav-1

இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறும் என்று நினைத்து ஏலம் நடைபெற்ற போது பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு ஒரு சில வீரர்கள் எடுக்கப்பட்டனர். அப்படி எடுக்கப்பட்ட வீரர்கள் பலரும் பெரிதாக சோபிக்கவில்லை. தங்களது தகுதிக்கு ஏற்றார்போல் ஆடவில்லை அப்படிப்பட்ட வீரர்களை தற்போது பார்ப்போம்.

Russell

ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா) :

கொல்கத்தா அணியின் அதிரடி வீரரான இவர் கடந்த சில வருடங்களாக நம்பமுடியாத வகையில் தனது அதிரடியை தொடர்ந்த வெளிப்படுத்தி வந்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் இந்த வருடம் பெரிதாக ரன்களும் அடிக்கவில்லை விக்கெட்டும் வீழ்த்தவில்லை.

Maxwell

கிளென் மேக்ஸ்வெல் (பஞ்சாப்) :

- Advertisement -

பஞ்சாப் அணிக்காக 10.74 கோடிக்கு எடுக்கப்பட்ட இவர் 2014ம் ஆண்டு மட்டுமே 500 ரன்கள் அடித்திருந்தார். அதன் பின்னர் பெரிதாக ஆடவில்லை. இந்த வருடம் 11 போட்டிகளில் விளையாடி பெரும் 108 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

Jadhav 1

கேதர் ஜாதவ் (சென்னை) :

சென்னை அணிக்கு 2018 ஆம் ஆண்டு 7.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது .இந்த வருடம் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. மேலும் இந்த தொடரில் மட்டுமின்றி இந்திய அணியிலும் தனது இடத்தினை அவர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்டன் காட்ரல்( கிங்ஸ் லெவன் பஞ்சாப்) :

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 8.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். செல்டன் காட்ரல் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் 6 போட்டிகளில் பங்குபெற்று வெறும் 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

coulternile

நாதன் குல்டர் நைல்(மும்பை) :

2020 ஆம் ஆண்டு ஏலத்தில் 8 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். காயம் காரணமாக அணிக்கு வெளியில் இருந்தால் அதன் பின்னர் 7 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.