இந்த ஐ.பி.எல் ஏலத்தில் ஆச்சரியப்படுத்திய 5 வீரர்களின் தேர்வு. இவங்களும் ஆடப்போறாங்களா ? – லிஸ்ட் இதோ

auction-1
- Advertisement -

14வது சீசனுக்கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் சமீபத்தில் நடந்த முடிந்த ஏலத்தில் 8 அணிகளும் தங்களுக்கு ஏற்ற வீரர்களை வாங்கின. இந்த ஏலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் 5 வீரர்கள் நல்ல தொகைக்கு ஏலம் போனார்கள். அவர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காண்போம் வாருங்கள்.

sharukh 1

- Advertisement -

ஷாருக்கான் :

தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான ஷாருக்கான் சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்தாக் அலி தொடரில் தனது அபார ஆட்டத்தின் மூலம் அனவரையும் தனது வசம் கவர்ந்தார். ஆரம்ப தொகையாக இருபது லட்சமாக இருந்த இவரது தொகை ஒரு கட்டத்தில் நிறைய அணிகள் போட்டி போட்டு கொண்டு கை உயர்த்த இவரது ஏலத்தொகை மல மலவென உயர்ந்து கொண்டே போனது.இறுதியில் பஞ்சாப் அணி இவரை 5.25 கோடிக்கு தனது அணியில் எடுத்துக்கொண்டது.

Pujara-1

சட்டீஸ்வர் புஜாரா :

- Advertisement -

இவரெல்லாம் ஏலத்தில் போகவே மாட்டார்.டெஸ்ட் விளையாட மட்டுமே லாயக்கு என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சென்னை அணி இவரை 50 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியது.

Harbhajan

ஹர்பஜன் சிங் :

- Advertisement -

சென்ற ஆண்டு சரியாக பெர்ஃபார்ம் செய்யாத காரணத்தால் சென்னை அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.இருப்பினும் தனது ஏலத்தொகையாக ரூபாய் 2 கோடியை நிர்ணயம் செய்து வைத்திருந்தார். இரண்டு கோடி குடுத்து யாரும் இவரை வாங்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் எண்ணிய வேலையில் இவரை ரெண்டு கோடிக்கே கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்து வியப்பூட்டியது.ஆனால் இவர் அந்த அணிக்கு ஒரு வகையில் பெரும் உதவியாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Jadhav-2

கேதர் ஜாதவ் :

- Advertisement -

ஹாபஜனை போன்றே ஜாதவும் மோசமான ஃபார்ம் காரணமாக சென்னை அணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளாகிய ஜாதவ் தனது அரம்ப தொகையாக 2 கோடி நிர்ணயம் செய்து வைத்தார்.நிர்ணயம் செய்து வைத்த அதே தொகைக்கு ஹைதெராபாத் அணி இவரை ஏலத்தில் வாங்கியது. அந்த அணியின் பயிற்சியாளர் லக்ஷ்மணன் இவர் எங்களது அணியின் மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

milne

ஆடம் மில்னே :

மிக குறைந்த ஐ பி எல் போட்டிகளில் மட்டுமே பங்கெடுத்துள்ள மில்னேவை கைப்பற்ற மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் மல்லு கட்டியது.ஒரு கட்டத்தில் மும்பை அணி 3 கொடியே 2 லட்சத்திற்கு இவரை வாங்கியது.சாம்பியன் அணியான மும்பை காரணம் இன்றி இவ்வளவு தொகைக்கு இவரை வங்கியிருக்க வாய்ப்பில்லை எதோ ஒரு காரணம் உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement